வீரமிக்க வரலாற்றை உலகிற்கு எடுத்துரைக்கும் செஞ்சிக் கோட்டை: அமைச்சர்
சென்னை, ஜூலை 12 - செஞ்சிக் கோட்டை யுனெஸ்கோ உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டதை வரவேற்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். அமைச்சர் தனது பதிவில், “செஞ்சிக்கோட்டை தமிழ் நாட்டின் வீரமிக்க வரலாற்றையும் பண்பாட்டுப் பெருமையை யும் உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு மாபெரும் அரண் கட்ட மைப்பு. இன்று யுனெஸ்கோ இந்த வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையை உலக புராதன சின்னமாக அறி வித்திருப்பது பெருமிதமும் மகிழ்ச்சியும் தருகிறது. இந்த அறிவிப்பு இந்தக் கோட்டையின் மாண்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. இக்கோட்டை கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர் தங்கும் இடங்கள் மற்றும் நெற்களஞ்சியம் ஆகியவற்றுடன் விஜயநகரப் பேரரசு, மராட்டியர், முகலாயர், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலே யர் ஆட்சிகளின்கீழ் ஒரு முக்கிய படைத்தளமாக விளங்கியது. இக்கோட்டையின் அழிவில்லாத கட்டமைப்பும், மூன்று மலைகளை அரணாகக் கொண்டு பரந்து விரிந்திருக்கும் அதன் வலிமையும் தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தை யும் வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்கு பறைசாற்று கிறது. இந்தக் கோட்டை உலகெங்கிலும் இருந்து வரலாற்று ஆர்வலர்கள், பயணிகள் மற்றும் ஆய்வாளர்களை ஈர்க்கும் ஒரு மையமாக மாறும். செஞ்சிக்கோட்டையின் புகழ் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் அதன் வீர வரலாற்றை யும் கலைநயத்தையும் உலக மேடையில் பிரகாசிக்கச் செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.