tamilnadu

img

பாபநாசம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கண், உடல் தானம்

பாபநாசம் பேரூராட்சி  முன்னாள் தலைவர்  கண், உடல் தானம்

பாபநாசம் செப் 13 பாபநாசம் அடுத்த திருப்பாலைத்துறை வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராசன்(92).  இவர் பாபநாசம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர். பெரியாரின் பெருந் தொண்டர். வயது மூப்பின் காரணமாக இறந்த இவர், இறக்கும் முன்னர், தனது மகன் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் தனது கண் மற்றும் உடலை தானமாக வழங்க கூறியிருந்தார்.  அதன்படி அவரது விருப்பத்தை ஏற்று அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண்களையும், சென்னை லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரிக்கு உடலையும் தானமாக வழங்கினர்.