நாட்டிலேயே முதல்முறையாக சென்னைக்குநிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு ரூ.107.2 கோடி செலவில் அமைக்கப்பட்ட நவீன அமைப்பு
சென்னை, அக்.22- சென்னைக்கு நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு மற்றும் இடஞ்சார்ந்த முடிவெடுப்பு ஆதரவு அமைப்பு (RTFF & SDSS) முழுமையாக செயல் பட்டுக்கு வந்துள்ளது. விரிவான நகர்ப்புற வெள்ள மேலாண்மை அமைப்பாகவும், நாட்டி லேயே முதல்முறையாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதுசுமார் ரூ.107.2 கோடி செலவில் அமைக்கப் பட்டுள்ளது. இது ஏரிகள், ஆறுகள், புயல் நீர் வடி கால் அமைப்பு மற்றும் கடல் ஆகியவற்றை உள்ளடக்கி யது. ஆறுகள் மற்றும் குளங்களில் நீர்மட்டத்தின் நம்பகமான முன்னறிவிப்பு களை வழங்குவதோடு மட்டு மல்லாமல், புளியந்தோப்பு, நுங்கம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, வேளச் சேரி, மீனம்பாக்கம் மற்றும் முடிச்சூர் போன்ற நகரில்வெள்ள பாதிப்படை யக்கூடிய பகுதிகளுக்கு தெரு மட்டஅளவில் வெள்ள முன்னறிவிப்புகளையும் இது வழங்குகிறது. பரந்த கண்காணிப்பு பரப்பளவு இதன் முக்கிய கவனம் சென்னை நகரமாக இருந்தாலும், இந்த அமைப்பு சுமார் 4,974 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ள டக்கியது. அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு மற்றும் கோவளம் நதித் துணைப்படுகைகள் இந்த அமைப்பின் கீழ் கண்காணிக்கப்படுகின்றன. "கடந்த இரண்டு ஆண்டு களாக, நாங்கள் [மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில்] முன்ன றிவிப்பை அளவீடு செய்து, முன்னறிவிப்புக்கான நெறிமுறைகளை எட்டி யுள்ளோம். இதுவரை, முடி வெடுப்பதற்காக உரு வாக்கப்பட்ட எந்தத் தரவையும் நாங்கள் பயன் படுத்தவில்லை. தற்போதைய வட கிழக்கு பருவமழை தொடங்கிய திலிருந்து, முடிவெடுப்ப தற்காக சம்பந்தப்பட்ட துறைகளுடன் முன்ன றிவிப்புகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கி னோம்," என்று மூத்த அதிகாரிகள் தெரி விக்கின்றனர். புதிய அமைப்பு, அனைத்து வகையான பேரிடர்களுக்கும் இணைய வழி அடிப்படையிலான முடி வெடுக்கும் ஆதரவு அமைப்பான TNSMART உடன் முழுமையாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்தனர். பொதுமக்களுக்கான முன்னறிவிப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில், RTFF & SDSS இன் கண்டுபிடிப்புகள் TN-Alert என்ற மொபைல் செயலி மூலம் பொது மக்களுக்கு வெள்ள முன் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்படும்என்று அதிகாரிகளில் ஒருவர் குறிப்பிடுகிறார். திட்ட செயல்படுத்தல் உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல் படுத்தப்படும் இந்த திட்டத்தில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) மெட்ராஸின் தொழில்நுட்ப மேற்பார்வை யின் கீழ், திட்ட ஆலோச கர்களான SECON-JBA மூலம், திட்ட நிதியை நிர்வகிக்கும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் (TNUIFSL) ஈடுபட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையரகத்தின் (CRA) ஒட்டுமொத்த மேற்பார்வை யின் கீழ், நீர்வளத் துறை (WRD) மற்றும் கிரேட்டர் சென்னை மாநக ராட்சி (GCC) அதிகாரிகள் அடங்கிய ஒரு துறைக ளுக்கிடையேயான குழு இந்த அமைப்பை நிர்வகிக்க முன்மொழியப்பட்டுள்ளது.