tamilnadu

ஆதாரை இணைத்து, புதுப்பிக்க வாய்ப்பளித்திடுக! டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்திடுக!

சென்னை, மார்ச் 26- டிஎன்பிஎஸ்சி குரூப் -2 மற்றும் குரூப்- 2ஏ  தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள  சிக்கலை நிவர்த்தி செய்து கால அவகா சத்தை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் நிரந்தர பதிவு முறையை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.150 பணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். மேலும் அந்த நிரந்தர பதிவு முறையில் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.  

இப்போது டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள  குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பல இளை ஞர்களால் 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க தவறியதன் காரணமாகவும், ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தாலும் விண்ணப்பிக்க முடியவில்லை. ஆகையால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மார்ச் 23 அன்று  முடியும் காலக்கெடுவை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை  புதுப்பிக்காத இளைஞர்களுக்கு டிஎன்பி எஸ்சி இணையதளத்திலேயே புதுப்பிக்க ஒரு  வாய்ப்பை கொடுக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஆதார்  எண்ணை இணைத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழிவகை செய்யவேண்டும். இந்த நடவடிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்யும் பட்சத்தில் டிஎன்பிஎஸ்சி மீது மேலும் இளை ஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதோடு பல ஆண்டுகளாக தேர்வு எழுதாமல் இருந்த இளைஞர்களுக்கு தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.