tamilnadu

img

அரசு ஊழியர் சங்கத்தின்  42 ஆவது அமைப்பு தின கொடியேற்றம்

அரசு ஊழியர் சங்கத்தின்  42 ஆவது அமைப்பு தின கொடியேற்றம்

கும்பகோணம், மே 7- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 42 ஆவது அமைப்பு தினத்தையொட்டி, கும்பகோணம் வட்டக் கிளை சார்பாக கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், இந்துசமய அறநிலையத் துறை அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், கால்நடைத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியும் அகில இந்திய அரசு ஊழியர் சங்க கொடியும் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன், கும்பகோணம் வட்டத் தலைவர் மதியழகன், வட்டச் செயலாளர் பிரபாகரன், வட்ட துணைத் தலைவர் மகேஸ்வரி, வட்ட பொருளாளர் கோபிநாத், வட்ட இணைச் செயலாளர் மஞ்சுளா மற்றும் துறைவாரி சங்க பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.