tamilnadu

img

மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநிலத் தலைவர் தோழர் கருணாமூர்த்தி காலமானார்

மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநிலத் தலைவர்  தோழர் கருணாமூர்த்தி காலமானார்

இராமநாதபுரம்,  ஜூலை 6 - இராமநாதபுரம் மாவட்டம் இரா மேஸ்வரத்தில் சனிக்கிழமை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினரும், சிஐடியு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்டச் செயலாளரும் மற்றும் மாநில தலைவருமான தோழர் கருணாமூர்த்தி (63) காலமானார்.  அன்னாரது மறைவு செய்தியறிந்து சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.மகாலட்சுமி, சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஆர்.குருவேல் ஆகியோர் நேரில்  அஞ்சலி செலுத்தினர்.  அதைத் தொடர்ந்து அஞ்சலி கூட்டம்  இராமேஸ்வரம் தாலுகா செயலாளர் சிவா தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.குருவேல், சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.மகாலட்சுமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சிவாஜி, மாவட்ட  செயற்குழு உறுப்பினர் கருணாகரன்,  தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்ட மைப்பு மாநில பொதுச் செயலாளர் அந்தோணி, இராமேஸ்வரம் நகராட்சித்  தலைவர் நாசர்கான், தமிழ்நாடு வாழ்வு ரிமை கட்சி மண்டல பொறுப்பாளர் ஜெரோன்குமார், மதிமுக மாநில செயற்குழு உறுப்பினர் கெவிக்குமார், அதிமுக நகர் துணைச் செயலாளர் பிரபாகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.இ. முருகானந்தம், காங்கிரஸ் கமிட்டி தலை வர் ராஜீவ் காந்தி ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.காசிநாததுரை, நா.கலையரசன், ராஜ் குமார், , மயில்வாகனன், கண்ணகி, ராஜா, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்ட பொரு ளாளர் முத்துவிஜயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தலைவர்கள் இரங்கல் மேலும், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், அகில இந்தியச் செயலாளர் ஆர்.கரு மலையான், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், திண்டுக் கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன்,  சிஐடியு துணை  பொதுச் செயலா ளர் வி.குமார், மாநில பொரு ளாளர் மாலதி சிட்டிபாபு, சிஐடியு  மாநில துணைத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், சிஐடியு மாநிலச் செயலா ளர் கே.சி.கோபிகுமார் ஆகியோர் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரி வித்தனர். சிஐடியு இரங்கல் சிஐடியு பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: இராமநாதபுரம் மாவட்ட மீனவ மக்களின் எந்தப் பிரச்சனை என்றாலும் ஓடோடி, அந்த பிரச்சனையை கையில்  எடுத்து வெற்றி காணும் வரை போரா டும் போராளியாக செயல்பட்ட தோழர்  கருணாமூர்த்தி 63 வயதில் காலமானார். இவருக்கு மனைவி, இரண்டு குழந் தைகள் உள்ளனர். இயக்கப் பணி யையே தனது இறுதி மூச்சு வரை லட்சியமாகக் கொண்டு உழைத்தவர. 1984 ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில்  தன்னை இணைத்துக் கொண்டு, கட்சியின் மாவட்டக் குழு உறுப்பின ராக, இடைக்குழு உறுப்பினராக செயல் பட்டவர். கடல் தொழிலாளர் சங்கத் தின் இராமநாதபுரம் மாவட்டச் செய லாளராகவும், சிஐடியு மாவட்ட துணை  செயலாளராகவும், மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவ ராகவும் செயல்பட்டவர்.  மீனவ மக்களின் பிரச்சனைகளை நேரில் சென்று கண்டறிந்து, அந்தப்  பிரச்சனைகளை தீர்க்கும் வரை தொடர்  போராட்டங்களை நடத்தியவர். பிழைப் புக்காக ஒப்பந்த கூலிகளாக சென்ற  மீனவர்கள் வெளிநாடுகளில் பல காரணங்களால் உயிரிழந்தபோ தெல்லாம், அதிகாரிகள், ஆளும் வர்க்கத்தினர் கைவிட்ட போதெல்லாம், தொடர்  போராட்டங்களை நடத்தி அவர்களது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வந்த வர். மேலும் அந்த குடும்பங்க ளுக்கு இழப்பீடுகள் பெற்றுத் தரு வதிலும் முன் நின்றவர். மாவட்டத்தில் விவ சாய நிலங்களை, கடல் வளங்களை பாதிக்கிற இறால் பண்ணைகளுக்கு எதிராக வலுமிக்க போராட் டத்தை நடத்தியவர். மீனவர்கள்  மற்றும் கிராம மக்களின் கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபடும் போது அரசு அதிகாரிகள் அலட் சியம் செய்தால், தனது கோபத்தை அதி காரிகளிடம் வெளிப்படுத்தி விடுவார். அதனால் இவர் வருகிறார் என்று, பயந்து போன பல அதிகாரிகள் அலுவ லகத்தைவிட்டு வெளியே சென்றதும் உண்டு.  எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் தனது போராட்டத்தில் சமரசம் செய்து கொள்ளாத மனிதர். அவரது இழப்பு மீனவ மக்களுக்கு மட்டு மல்ல, இராமேஸ்வரம் பகுதி இடது சாரி இயக்கத்திற்கும், சிஐடியு மற்றும் மீனவர்களுக்கும் மிகப்பெரியது. அவரை இழந்து வாடும் அவர்க ளின் குடும்பத்தினருக்கும், சிஐடியு  உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளுக் கும் சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழு  தனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.