மீன்கள் விலை சரிவு: தீவனத்திற்கு சென்றது
சென்னை, ஆக. 24- காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான மக்கள் மீன்கள் வாங்க கூடுவது வழக்கம். அதிகாலை 2 மணி அளவில் வியாபாரிகள் மீன்களை ஏலத்தில் எடுப்பார்கள். காலை ஐந்து மணிக்கு மேல் சில்லறை விற்பனை நடைபெறும். வரும் புதன்கிழமை விநாயகர் சதூர்த்தி வருவதால் பெரும்பாலான படகுகள் கரைக்கு திரும்பியிருந்தன. பெரிய ரக மீன்கள் குறைவாகவே வந்திருந்தன. ஆனால் சிறிய வகை மீன்கள் ஏராளமாக கிடைத்திருந்தன. கேரளா, கர்நாடகா, கோவா பகுதி யில் இருந்து ஏராளமான மீன்கள் சென்னைக்கு விற்பனைக்கு வந்த தால், மீன் வாங்கும் மொத்த வியாபாரி கள் காசிமேடு மீன் பிடி துறைமுகத் திற்கு குறைவாகவே வந்திருந்தனர். அதேநேரம் பொதுமக்கள் ஏராள மானோர் மீன் வாங்க வந்திருந்தனர். ஆனால் வியாபாரிகள் அதிகளவு வந்தால் தான் மீனுக்கு விலை இருக்கும். இதனால் பெரிய வகை மீன்களுக்கு மட்டும் விலை இருந்தது. சிறிய ரக மீன்களுக்கு விலை இல்லை. இதுகுறித்து விசைப்படகு உரிமை யாளர்கள் கூறுகையில், சிறிய ரக வாளை தவலை போன்ற மீன்கள் ஒரு கூடை வெறும் 300 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறினர். மேலும் இந்த சிறிய மீன்களை எண்ணெய் எடுப்பதற்கும், கோழி தீவனத்திற்கும் ஏலம் எடுத்துச் சென்றதாக கூறு கின்றனர்.