எஸ்கேபி பள்ளியில் முதல் எழுத்து விழா
திருவண்ணாமலை, அக். 3- திருவண்ணாமலை எஸ்.கே.பி வனிதா பன்னாட்டுப் பள்ளி மற்றும் எஸ்.கே.பி வனிதா மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து விஜய தசமியை முன்னிட்டு முதலெழுத்து விழா நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் கே.வி.அரங்க சாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.கே.பி வனிதா பன்னாட்டுப் பள்ளியின் முதல்வர் கிறிஸ்டினா வரவேற்புரை ஆற்றினார். உடன் பிஆர்ஓ சையத் ஜஹிருத்தீன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத் தலைவர் செ.மதுமஞ்சரி கலந்து கொண்டார். செ.மது மஞ்சரிக்கு பள்ளி முதல்வர்கள் கிறிஸ்டினா, காயத்ரி ஆகியோர் கேடயம் வழங்கினர்.
 
                                    