புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் தவணையாக, தீக்கதிர் 20 ஆண்டுச் சந்தாக்களுக்கான தொகை ரூ.46,000-ஐ ஞாயிற்றுக்கிழமை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழின் முதன்மை பொது மேலாளருமான என்.பாண்டியிடம் ஒப்படைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கவிவர்மன், சு.மதியழகன், கி.ஜெயபாலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், எஸ்.கலைச்செல்வன், மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.