tamilnadu

img

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது

தேசிய பணவீக்கத்தை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. 2024-25 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.44 சதவீதமாக இருக்கும். நிதி பற்றாக்குறை 3.5 விழுக்காடாக  இருக்க வேண்டும். அந்த வரம்புக்குள் தமிழ்நாடு அரசு உள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து வரும் நிதிப்பகிர்வு, மானியம் குறைந்துகொண்டே வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார நிலை ஆரோக்கியமாக உள்ளது. தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1,95,17 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்திரப்பதிவு துறையில் கடந்த வருடம் எதிர்பார்த்த அளவு வரி வருவாய் கிடைக்கவில்லை. இயற்கை பேரிடர்களால் தமிழ்நாட்டின் வருவாய் குறைந்திருக்கிறது. நிவாரண தொகைக்காகவே அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. 2 பேரிடர்களுக்கான நிதியும் அரசின் வரி வருவாயில் இருந்து செலவிடப்பட்டது. 10ஆவது நிதிக் குழுவில் 6.64 விழுக்காடாக இருந்த நிதிப் பகிர்வு 15ஆவது நிதிக் குழுவில் 4.08 விழுக்காடாக குறைந்துள்ளது. ஒன்றிய அரசு வழங்கும் மானியங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. வரி திரட்டுவதற்கான முயற்சி களை கவனமாக கையாண்டு வருகிறோம். மோட்டார் வாகனம் மூலம் கிடைக்கும் வரி வருவாய் திருப்திகரமாக உள்ளது. இந்த வருடம் 15 விழுக்காடு வணிக வரியில் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது.  போட்டி தேர்வு பயிற்சிக்காக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்  முக்கிய அம்சங்கள் குறித்து நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதில் இருந்து...