பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
சென்னை, செப்.24- தமிழக எரிசக்தி துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன் (56) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் புதனன்று (செப்.24) காலமானார். கடந்த இருமாதங்களாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1997 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி யான பீலா வெங்கடேசன், மருத்துவப் படிப்பை முடித்த பின்னர் அரசுப் பணி யில் சேர்ந்தவர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய இவர், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிமுக ஆட்சியின்போது, சுகாதாரத்துறை செயலாளராக முக்கியப் பொறுப்பு வகித்தார். அந்தக் காலகட்டத்தில் தினமும் செய்தி யாளர்களைச் சந்தித்து கொரோனா தொடர்பான விவரங்களை வழங்கி மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம், வாழை யடியைச் சேர்ந்த பீலா வெங்கடேசனின் தந்தை எல்.என்.வெங்கடே சன் தமிழக காவல் துறையில் டிஜிபியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். தாய் ராணி வெங்க டேசன் சாத்தான்குளம் தொகுதி யின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பீலா 1992ஆம் ஆண்டு ஒடிசாவை சேர்ந்த ராஜேஷ் தாஸை மணந்தார். ராஜேஷ் தாஸ் தமிழக காவல்துறையின் சிறப்பு டிஜிபியாக பணியாற்றியவர்.பாலி யல் குற்றச்சாட்டில் ராஜேஷ்தாஸ் தண்டனை பெற்றதால் அவரிடமிருந்து விலகினார்.