tamilnadu

img

கூட்டாட்சிக் கொள்கை இந்தியாவின் வலிமை

கூட்டாட்சிக் கொள்கை  இந்தியாவின் வலிமை

சென்னை, ஆக. 23 - மாநில சுயாட்சி குறித்த முதல் தேசிய கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்  றிய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த துடன், மாநில உரிமைகளைக் பாது காக்க, அரசியலமைப்புத் திருத்தத் திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு ஏற்பாட்டில் நடை பெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க  கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற முன்  னாள் நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், அரசியல் அறிஞர்கள் மற்றும் பல்க லைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்ற னர். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி  ஜே.செலமேஸ்வர் சிறப்புரையாற்றினார். கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 1967-இல் பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய மாநில உரி மைகளுக்கான அரசியலமைப்பு மறு  ஆய்வு தொடர்பான வரலாற்று பின்ன ணியை விவரித்தார். 1969-இல் முதல மைச்சர் கலைஞர் நீதிபதி ராஜமன் னார் தலைமையில் அமைத்த குழு  1971-இல் தனது வரலாற்று சிறப்புமிக்க  அறிக்கையை வழங்கியது. அதன்  அடிப்படையில் 1974-இல் மாநில சுயா ட்சி தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத் தில் நிறைவேற்றப்பட்டதை  நினைவு படுத்தினார். தற்போதைய ஒன்றிய அரசின் மாநில எதிர்ப்பு நடவடிக்கைகளை கடு மையாக விமர்சித்த முதலமைச்சர், காஷ்மீர் மாநில அந்தஸ்தை அரசிய லமைப்பை மீறி கலைத்தது, ஆளு நர்களின் அரசியல் தலையீடு, நிதிப்  பங்கீட்டில் நியாயமின்மை ஆகிய வற்றைச் சுட்டிக்காட்டினார். 1988-இல்  வெளியான சர்க்காரியா குழு அறிக்கை, “ஒன்றிய அரசுக்கு இரத்தக்  கொதிப்பும், மாநிலங்களுக்கு இரத்தச்  சோகையும்” உள்ளதாக குறிப்பிட்ட போதும், மாநிலங்களுக்கு அதிக அதி காரம் வழங்கும் பரிந்துரைகள் செய் யப்படவில்லை என்று விமர்சித்தார். 2007-இல் அமைக்கப்பட்ட புஞ்சி ஆணையம், ஆளுநர் நியமனத்தில் மாநில முதலமைச்சர்களுடன் கலந்  தாலோசிக்க பரிந்துரை செய்த போதும், ஒன்றிய அரசு அதை ஏற்க வில்லை என்று குறிப்பிட்டார். தமிழ் நாட்டில் தற்போதைய ஆளுநரின் செயல்பாடுகளை வைத்தே இதை அறிந்துகொள்ள முடியும் என்றார். இந்தித் திணிப்பு எதிர்ப்பு தொடர்  பாக பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் நிலைப்பாடு இப்போது பல மாநிலங்களில் பரவியுள்ளதாக தெரிவித்தார். கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரி வித்துள்ளன. 2025-இல் மகாராஷ்டிரா வில் நடந்த இந்தி எதிர்ப்புப் பேர ணிக்குப் பின் பாஜக முதலமைச்சர் பட்னாவிஸ் கூட மராட்டிய மாநி லத்தில் இந்தி கட்டாயமில்லை என்று அறிவித்ததை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில்  கூட்டாட்சி என்ற கொள்கையே இந்தி யாவின் பன்முகத்தன்மையையும் ஒரு மைப்பாட்டையும் வலிமைப்படுத்தும். தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் முயற்சியால்தான் ஒன்றுபட்ட இந்  தியா வலிமை பெறும். பலவீனமான மாநிலங்களால் இந்தியாவை உயர்த்த  முடியாது” என்று வலியுறுத்திய முதல மைச்சர், அனைத்து மாநிலங்களும் இதுபோன்ற குழுக்களை அமைத்து மாநில உரிமை முழக்கத்தை முன்னெ டுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாநிலங்களின் சுயாட்  சிக்காக அரசியலமைப்பு சட்டத் திருத்  தம் பெற அனைத்து வகையிலும் முயற்சி செய்வதாக உறுதியளித்தார். தேசியக் கருத்தரங்கில் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி.கே. சேகர் பாபு, கோவி. செழியன், உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதிகள் குரியன் ஜோசப், ஜே. செலமேஸ்வர், தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, கேரள முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.