நுண்ணீர் பாசன மானியத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தஞ்சாவூர், ஜூலை 20 - வேளாண் பயிர்களுக்கு, பிரதமர் மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ் மானியம் பெற்று தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் பயனடையலாம் என வேளாண்மை இணை இயக்குநர் கோ.வித்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 2,700 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.6 கோடி மானியம், வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆதி திராவிடர் பிரிவினருக்கு 718 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 5 ஏக்கர் பரப்பளவு வரையுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பாசனம் அமைப்பதற்கான கருவிகள் வாங்கும் செலவில் 100 சதவீத மானியம் வழங்கப்படும். பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும். மேலும், சொட்டு நீர் பாசனத்தின் முக்கியமான சிறப்பம்சம் பாசன நீர் சேமிப்பு ஆகும். மற்ற பாசன முறைகளைக் காட்டி லும் சொட்டு நீர் பாசனத்தில் அதிகளவு நீர் சேமிக்கப்படு கிறது. பயிரிடப்பட்டுள்ள பரப்பளவில் 30 முதல் 40 விழுக்காடு மட்டுமே பாசனம் பெறுவதன் மூலமும், வாய்க்கால் வழிநீர் விரயம் முற்றிலும் தவிர்க்கப்படுவதன் மூலமும் நுண்ணீர் பாசன நீர் 50 முதல் 60 விழுக்காடு வரை சேமிக்கப்படுகிறது. மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் நீர் பயன்பாட்டு திறன் அதிகரித்து, அதிக விளைச்சல் அளிப்பதற்கும் உர பயன்பாட்டில் சிக்கனம் ஏற்படவும், களை வளர்ச்சி மற்றும் பூச்சி, பூஞ்சாண தாக்குதல் குறைவாக உள்ளதென அறியப் பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் மேற்கண்ட சொட்டு நீர் பாசனத்தின் பயன்களை அறிந்து, தங்கள் விளை நிலங்களில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு சொட்டுநீர் பாசனம் அமைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
ஊதியத்தை உயர்த்தி வழங்க சுமைப் பணி தொழிலாளர்கள் கோரிக்கை
மயிலாடுதுறை, ஜுலை 20 - மயிலாடுதுறை மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் சுமைப் பணி தொழிலாளர்கள் மாவட்ட பேரவை (சிஐடியு) ஜான்பால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை துவக்கி வைத்து கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் உ.ராஜேந்திரன் உரையாற் றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.மாரியப்பன் சிறப்பு ரையாற்றினார். பேரவையில் 9 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டு, தலைவராக விஜயகுமார், செயலாள ராக ஜான்பால், பொருளாளராக ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுகா குடோனில் ரேசன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட் களை ஏற்றி இறக்கும் தொழிலாளர்களுக்கு தற்போது அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு ஆகிய மூட்டைகளுக்கு தலா ரூ.3-ம், ஆயில் பாக்ஸுக்கு ரூ.1-ம் வழங்கப்பட்டு வருகிறது. இது தற்போது உள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகை யில் இல்லை. எனவே மூட்டை ஒன்றுக்கு 15 ரூபாயும், எண்ணெய் பெட்டிக்கு 8 ரூபாய் வீதத்திலும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும். 28 ஆண்டு காலம் ஒரே இடத்தில் பணி செய்து வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் கூடல் நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி, ஜூலை 30 - தமிழ்ப்பட்டறை இலக்கிய பேரவை சார்பில் வாழ்த்தரங் கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய தமிழ் கூடல் நிகழ்ச்சி சனிக்கிழமை திருச்சி அஜந்தா ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்ப் பட்டறை இலக்கிய பேரவை நிறு வனத் தலைவர் சேக்கிழார் அப்பாசாமி தலைமை வகித்தார். இதில் தஞ்சை தமிழ் மன்றத் தலைவர் இராம. வேல்முரு கன், புதுவை தமிழ் சான்றோர் பேரவை நிறுவனர் முனைவர் நெய்தல்நாடன், திரைப்பட பாடலாசிரியர் விக்டர் தாஸ் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி புதுதில்லியில் போராட்டம் நடத்துவது. தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் வணிக மற்றும் வியாபார நிறுவனங்களின் பெயர் பலகை களை முற்றிலும் தமிழில் எழுத வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.