tamilnadu

img

விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர்கள் நில உரிமைப் போராட்டம்

விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர்கள் நில உரிமைப் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழுவிய  நில உரிமைப் போராட்டம் நடைபெற்றது. அனைத்து பகுதிகளிலும் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, விவசாய தொழிலாளர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம், கோவில், மடங்கள் மற்றும் சர்வ சமய நிலங்களில் பயிர் செய்யும் குத்தகை விவசாயிகளின் பாதுகாப்பு, முன்னோர்கள் பெயரில் உள்ள நிலத்தை அவர்களது வாரிசுதாரர்களின் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்,  தமிழ்நாடு நில உரிமைச் சட்டம் 2023-ஐ திரும்பப் பெறுக போன்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.