tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

நாளை விவசாயிகள்  குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, செப். 17-  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் செப்.19 ஆம் தேதி (வெள் ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் புதுக் கோட்டை மாவட்ட ஆட்சி யரகத்தில் மாவட்ட ஆட்சி யர் மு.அருணா தலைமை யில் நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் பல்வேறு  துறை அரசு அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக் கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவை யான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்களைத் தெரிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை தெரி வித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.  

கல்லூரி மாணவர்கள் குருதிக் கொடை

கும்பகோணம், செப்.17- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில்  குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் மா.கோவிந்தராஜூ தலை மையேற்று முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் கும்ப கோணம் அரசு தலைமை மருத்துவமனை தலைமை  அறுவை சிகிச்சை மருத்துவர் ஆர். சுகந்தி, செவிலியர் சலீம் மற்றும் குருதிக் கொடை வங்கி  மருத்துவ உதவியா ளர்கள் மாணவ, மாணவி களிடம் குருதிக்கொடை யின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, மாணவர்கள் குருதிக் கொடை வழங்க ஊக்கு வித்தனர்.  இந்நிகழ்வில் கல்லூரி  மூத்த பேராசிரியர் வேதி யியல் துறைத் தலைவர் மா. மீனாட்சிசுந்தரம், பேராசிரியர்கள் மற்றும்  அலுவலக பணியா ளர்கள் கலந்து கொண்ட னர். முகாமில் 110 மாணவ, மாணவிகள் குருதிக்கொடை வழங்கி னர். குருதிக்கொடை வழங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி  முதல்வர் மற்றும் தலைமை மருத்துவர் சான்றிதழ் வழங்கினர்.  

பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர், செப்.17 -  உங்களுடன் ஸ்டா லின் திட்ட முகாம், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத் திற்குட்பட்ட நெய்க் குப்பை அரசு உயர் நிலைப் பள்ளியிலும், ஆலத்தூர் வட்டத்திற்குட் பட்ட வரகுபாடி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியிலும் செவ் வாய்க்கிழமை நடை பெற்றது.  இதில், நெய்க்குப்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சியர் ந.மிரு ணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்து, மனு  அளிக்க வந்த பொது மக்களிடம் கோரிக்கை கள் மற்றும் தேவை கள் தொடர்பாக கேட்டறிந் தார். பின்னர், பயனாளி களுக்கு பட்டா மாற்றத் திற்கான ஆணை, உழவர் பாதுகாப்பு அட்டை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை ஆட்சி யர் வழங்கினார்.

தற்காலிக பட்டாசு விற்பனை கடைக்கு  அக்.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரியலூர், செப்.17 - தீபாவளி பண்டிகையையொட்டி, அரியலூர் மாவட்டத் தில் தற்காலிக பட்டாசு விற்பனை கடை வைக்க விரும்பு வோர் அக்.10 ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக  விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “அக்.20 ஆம் தேதி  தீபாவளி பண்டிகையையொட்டி ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் நிபந்தனை களின்படி இணையதளம் வழியாக மட்டும் அக்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப் படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. அனைத்து இ-சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இருப்பிட முகவரிக்கான சான்று, கடை வைக்கப்படும் இடத்தின் முகவரிக்கான சான்று,  பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றுடன் உரிமக் கட்டணம்  ரூ.600-ஐ, இ-செலான் மூலம் செலுத்திய சீட்டு அசல், சொந்த கட்டடம் எனில் பட்டா நகல், வாடகை கட்டடம் எனில்  வாடகை ஒப்பந்தப் பத்திரம், குத்தகை நிலம் எனில் குத்தகை  ஆவணம், இடத்துக்கான சொத்து வரி ரசீது, சுய உறுதி மொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் ஆகிய வற்றை இணைக்க வேண்டும். அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கும்பகோணம்: தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்ப கோணத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என நிர்வாக இயக்குநர் தசரதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மற்றும்  தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் (தென் மண்ட லம்) இணைந்து, இணையதளம் மூலமாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.  பொறியியல் பட்டம், பட்டயபடிப்பு (இயந்திர வியல் / தானியியங்கியல்) மற்றும் பொறியியல் அல்லாத கலை, அறிவியல், வணிகம் பட்டதாரி கள் 2021, 2022, 2023, 2024  மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களிடமிருந்து ஒரு வருட தொழிற் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.  தொழிற்பயிற்சி சட்டத்தின்கீழ் விண்ணப்பங் கள் இணையதளம் வழியாக (Online) மூல மாக வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங் களுக்கு https://nats.education.gov.in  என்ற இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப் பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்-18.10.2025. பட்டத்தாரிகள் இந்த அறிய  வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்