tamilnadu

வறிய நிலையில் உள்ள எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க விவசாய சங்கம் கோரிக்கை

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குக விவசாயிகள் சங்க சூளகிரி வட்ட மாநாடு வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, ஜூலை 28- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சூள கிரி வட்ட 8வது மாநாடு தலைவர் அஹ்மத் பாஷா தலைமையில், பொருளாளர் நாராய ணப்பா முன்னிலையிஃல் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணை தலைவர் குண்டப்பா கொடியேற்றி னார்.  விவசாயிகள் பேரணிக்குப்பின்  மாநாடு துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து  மாநில செயலாளர் பி.பெருமாள் உரை யாற்றினார். வட்டச் செயலாளர் முரளி வேலை அறிக்கை வாசித்தார்.மாவட்டத் தலைவர் முருகேசன்,பொருளாளர் எம்.எம்.ராஜு வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர் 1952 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி கேஆர்பி அணை கட்ட அங்கிருந்து வெளி யேற்றப்பட்டு சூளகிரி பகுதியில் மறு குடியமர்த்தப்பட்ட 15 கிராம மக்களின் வீட்டு மனைகள், விவசாய நிலங்களுக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் பட்டாக்கள் வழங்கிடவேண்டும், வீடு,வீட்டு மனை யற்ற தகுதியானஅனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டாவும்,வீடு கட்டி குடியி ருந்து வருபவர்களுக்கு வீடு,விவசாய நிலத்திற்கு பட்டாவும் வழங்கிடவேண்டும், சூளகிரி பகுதியில் சிப்காட் அமைத்திட 3 போகம் விவசாயம் செய்து வரும் செழிப்பான நிலங்களை கட்டாயப்படுத்தி கையகப்படுத்தும் முயற்சியை கைவிடவேண்டும், அதிகமான காய்கறி கொத்தமல்லி விலையும் இப்பகுதி யில் உழவர் சந்தை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. வட்ட தலைவர் நாராயணப்பா, செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் ஸ்ரீநாத் உள்ளிட்ட 26 வட்டக்குழு உறுப்பி னர்கள் தேர்வு  செய்யப்பட்டனர்.அத்து டன் இணைப்பு சங்கமான தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன்,செயலாளர் எஸ். முனி யப்பா,பொருளாளர் சின்னப்பா உள்ளிட்ட வட்டக்  குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவுரையாற்றிய மாவட்ட செய லாளர் பிரகாஷ் சூளகிரி வட்டத்தில் விவ சாயிகள் நிலத்தின் வழியே கெயில் குழாய் பதிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தி வெற்றிபெற்றதை குறிப்பிட்டார். விவ சாய நிலத்தில் மின் கோபுரங்கள் அமைப்பதை தடுத்தும்,பல பகுதிகளில் விவசாய சங்க போராட்டத்தின் மூலம் தட்சிண திருப்பதி ராமன்தொட்டி,நாகமலை மலை கிராமங்களில் 100 க்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.