விழுப்புரம், மார்ச்.6- விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனியார் நிறுவ னம் கடனை கட்டச் சொல்லி தொடர்ந்து தொல்லை கொடுத்த தால் தற்கொலை செய்து கொண் டார். மேல்மலையனூர் வட்டம் தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் சின்னதுரை என்கிற விவசாயி. தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடன் வாங்கி உள்ளார். கொரோனா காலத்தில் வருமானம் இன்றி தவித்ததால் தவணை கட்டாத காரணத்தால் டிராக்டரை தனியார் நிறுவனத்தினர் பறிமுதல் செய்தனர். ஒரு குறிப்பிட்ட காலத்தில் கடனை கட்டி விடுவதாக சொல்லியும் அதை ஏற்க மறுத்த ஸ்ரீராம் நிதி நிறுவனத்தி னர் குண்டர்களை வைத்து டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த சின்ன துரை தற்கொலை செய்து கொண்டார், இதையறிந்த விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஆர்டி.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராதா கிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் ஆகியோர் நேரில் சென்று விவசாயி குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறினர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தனியார் நிறுவனத்தின் இப்படிப்பட்ட அராஜகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்ததுள்ள பிறகும் நிதி நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்வது கடுமையான கண்ட னத்துக்குரியது என்றனர்.
கட்டாயப்படுத்தி விவசாயிகளை மிரட்டும் நிதி நிறுவனத்தின் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக் குப்பதிவு செய்து கைது செய்வ துடன் வேறு எங்கும் இது போன்ற நிகழ்வு நிகழாமல் இருக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசா யின் குடும்பத்துக்கு 30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், நிறுவனம் பறிமுதல் செய்த டிராக்டரை திருப்பிக் கொடுக்க வேண்டும், தனியார் நிதி நிறுவனத்தில் விவசாயிகளுக்கு உள்ள கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும், இந்த கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கைகளை நிறை வேற்றாத வரை இறந்த விவசாயி உடலை வாங்க மாட்டோம் என விவசாய சங்கத்தினர் தெரி வித்துள்ளனர். சிபிஎம் வட்ட செயலாளர் டி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.சௌந்தராஜன், விவசாயிகள் சங்க வட்டச் செயலா ளர் எழில் ராஜா, விதொச மாவட்ட துணைச் செயலாளர் அபிமண் ணன்,குமார், சுப்பிரமணியன், ஏழுமலை, விவசாய சங்க வாலிபர் சங்க ஹரிஹரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெ.சண்முகம் கண்டனம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செய லாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கடனை திருப்பிச் செலுத்த கட்டாயப்படுத்தி விவசாயி களை மிரட்டும் நிதி நிறுவனத்தின் மீதும், அதன் மேலாளர் மீதும் டிராக்டரை பறிமுதல் செய்த குண்டர்கள் மீதும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன் வேறு எங்கும் இது போன்ற நிகழ்வு நிகழா மல் இருக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மீதியுள்ள கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை உடனடியாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கிட வேண்டும் என்றும் அவர் அந்த அறிகையில் கூறி யுள்ளார்.