கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும்
கோவை, அக்.5- கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலை யில் சம்பந்தப்பட்ட கட்சியின் தலை வர், பொறுப்பாளர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் வேதனை தெரி வித்துள்ளார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு பழனியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க சிபிஎம் மூத்த தலைவரும், ஆதிவாசி மக்களுக்கான தேசிய மேடையின் துணைத் தலைவருமான பிருந்தா காரத் தில்லியில் இருந்து ஞாயிறன்று (அக்.5) கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் பேசுகையில், “பழனியில் நடை பெறும் மலைவாழ் மக்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள உள் ளோம். மலைவாழ் மக்களுக்கான நீதி குறித்து பேசவுள்ளோம். கரூரில் தவெக பிரச்சாரத்தின்போது உயிரி ழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரி வித்துக் கொள்கிறேன்” என்று கூறி னார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகை யில், “இரண்டு நாட்களுக்கு முன்பு எங்கள் பொதுச் செயலாளர் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார். விசாரணை ஆணை யத்தின் அறிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு அர சால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். தமிழக முத லமைச்சர் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்துள் ளார். கூட்டங்கள் போன்றவை நடை பெறும்போது, அதன் ஏற்பாட்டா ளர்களின் பொறுப்பு முக்கியமானது. உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சியின்போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பொது நிகழ்ச்சிகளில் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுகின்றன” என்று சுட்டிக்காட்டினார். சிபிஎம் சார்பிலும் கரூர் சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி வரு கின்றனர். “தமிழக முதல்வர் தாமதப் படுத்தாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின ரை சந்தித்தார். ஆனால் சம்பந்தப் பட்ட அந்த அரசியல் கட்சித் தலைவர் விஜய் அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதனை நீதிமன்றமும் சுட்டிக்காட்டி யுள்ளது. இதனை என்னால் நினைத் துக் கூட பார்க்க முடியவில்லை” என்று பிருந்தா காரத் வேதனையுடன் தெரிவித்தார்.
