tamilnadu

img

ம.பி.யில் இந்துத்துவா குண்டர்கள் வன்முறை

ம.பி.யில் இந்துத்துவா குண்டர்கள் வன்முறை

பாஜக ஆளும் மத்தியப்பிர தேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ளது தரானா. இங்கு இந் துத்துவா அமைப் பான விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பைச் சேர்ந்த இளைஞரணித் தலைவர் மர்ம நபர்க ளால் வெள்ளியன்று தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் விஎச்பி குண்டர்கள் வெள்ளியன்று இரவு தரானா நகர வீதிகளில் வன்முறையில் ஈடுபட்டனர். சாலைகளில் கற்களை வீசியும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீயிட்டு கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் கடைகளை அடித்து நொறுக்கியும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர். காவல்துறை தடியடி நடத்தியதால், வன்முறை கட்டுப் படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளி யாகியுள்ளன.