ஒடிசா தலைமைச் செயலாளரிடம் சிபிஎம் கோரிக்கை மனு
பாஜக ஆளும் ஒடிசா மாநில மக்களின் தீவிரமடைந்து வரும் வாழ்வாதார நெருக்கடி, அதிகரித்து வரும் சமூக அநீதி, வன்முறை மற்றும் பாதுகாப்பற்ற சூழல் ஆகியவற்றைத் தீர்க்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு, அம்மாநில தலைமைச் செயலாளரிடம் 16 அம்சக் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்துள்ளது. இந்த சந்திப்பின் போது சிபிஎம் மாநிலச் செயலாளர் சுரேஷ் சந்திர பனிகிராகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் துஷ்மந்த குமார் தாஸ், சிசிர் ஹுய், புஷ்பா தாஷ், யமேஸ்வர் சமந்தரே மற்றும் பத்ரி நாராயண் தாஸ் ஆகியோர் அடங்கிய குழு, ஒடிசா தலைமைச் செயலாளருடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியது.
