states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்

2013ஆம் ஆண்டில் இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக 60-ஐ தாண்டியபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை அதிகம் பேசாதவர் என்ற பிம்பத்தை வைத்து மோடி,”ரூபாய் தனது குரலை இழந்துவிட்டது. பிரதமரைப் போலவே” என விமர்சித்து இருந்தார். ஆனால் நாட்டின் நாணயம் மரணப் படுக்கையில் உள்ளது. அதற்கு உடனடியாக ஒரு மருத்துவரின் கவனிப்பு தேவை.

அரசியல் விமர்சகர் பஞ்சால்

பத்திரிகையாளர் சித்ரா திரிபாதி இப்பொழுது நடுநிலையாக மாறிவிட்டார். அவர் கோடி மீடியாவை விட்டு வெளியேறிவிட்டார். 2 நாட்களுக்கு முன்பு அவர் மோடி அரசாங்கத்திடமும் கேள்விகளை எழுப்பினார். தனது இந்த புதிய பாணியால் தற்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் சச்சின் குப்தா

உத்தரகண்ட் பாஜக தலைவர் அபர்ணா யாதவ் (பெண்) கங்கை யில் புனித நீராட வந்திருந்த போது, செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். இதற்கு பதிலளிக்காமல் அபர்ணா யாதவ், ”இவர்கள்  நான் குளித்துக் கொண்டிருக்கும்போது வலுக்கட்டா யமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். செய்தியாளர்களை புகைப்படம் எடுங்கள்” என தனது தொண்டர்க ளிடம் கூறி, பத்திரிகையாளர்களை சம்பவ இடத்திலேயே மிரட்டினார்.

சிபிஐ கேரள மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம்

சசி தரூரின் உடல் மட்டும்தான் காங்கிரஸில் இருக்கிறது. ஆனால் அவரது ஆன்மா பாஜகவிடம் உள்ளது. பாஜகவினர் போல தான் சசி செயல்பட்டு வருகிறார்.