states

img

மேற்குவங்கத்தில் நிபா வைரஸ் 5 பேருக்கு பாதிப்பு ;  100 பேர் தனிமையில்

மேற்குவங்கத்தில் நிபா வைரஸ் 5 பேருக்கு பாதிப்பு ;  100 பேர் தனிமையில்

பழம் தின்னும் வௌவால்கள் மூலம் நிபா வைரஸ் மனிதர்களுக்குப் பரவு கிறது. இது தீவிர ஆட்கொல்லி நோயாகும். முன்பு கேரளாவில் நிபா வைரஸ் பரவியது. அம்மாநில அரசின் தீவிர சுகாதார நடவடிக்கையால் கேரளா வில் நிபா வைரஸ் பரவல் கட்டுப் படுத்தப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க மாநி லத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறி யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 5 பேருக்கு (நாடியா, முர்ஷிதாபாத் மாவட் டங்களில்) நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவப் பணியாளர்களும் அடங்கு வர். பாதிக்கப்பட்டவர்களுடன் தொட ர்பில் இருந்த சுமார் 100 பேர் தனி மைப்படுத்தப்பட்டுள்ளனர். சோதனை நிபா வைரஸ் பரவலால் கொல்கத்தா வில் உள்ள அலிப்பூர் உயிரியல் பூங்கா வில் உள்ள வௌவால்கள் இந்த வைர ஸைப் பரப்புகின்றனவா என்பதைக் கண்டறிய தேசிய மருத்துவ ஆராய்ச்சி  நிறுவனம் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளது. 75% மரண வாய்ப்பு காய்ச்சல், தலைவலி, மூச்சு விடு வதில் சிரமம் ஆகியவை நிபா வைரஸ் ஆரம்பகட்ட அறிகுறிகளாகும். நோய்த்தொற்று மோசமானால் மூளை அழற்சி ஏற்பட்டு உயிரிழப்பிற்கு வழி வகுக்கும். நிபா வைரஸிற்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை. அதனால் இறப்பு ஏற்பட வாய்ப்பு 40% முதல் 75% வரை மிக அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.