விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணை‘ய உத்தரவை அடுத்து இண்டிகோ 700 விமான சேவைகளை திடீரென ரத்து செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை ஒட்டி ஜனவரி 27ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. “குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக அரசி யலுடன் மதத்தை இணைப்பது எப்போதும் ஆபத்துக்களை விளைவிக்கும். அரசியலமைப்புச் சட்டமும் பொது நலனில் கவனம் செலுத்தும் செயல் களையே உண்மையான தேசியக் கடமையாக அங்கீகரிக்கின்றன. அதாவது அரசியலமைப்பு, அரசியலில் இருந்து மதத்தை தனித்து வைத்தி ருக்கின்றது” என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
