tamilnadu

img

திருவாரூரில் கண் தான விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் கண் தான விழிப்புணர்வு பேரணி

திருவாரூர், செப்.10 - திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், கண் வங்கி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து நடத்திய தேசிய கண்ணொளி திட்டத்தின்கீழ் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  கண் தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த மாண வர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.  இப்பேரணியில் கண் தானத் தின் முக்கியத்துவத்தை வலியு றுத்தும் வகையில் துண்டு பிர சுரங்கள், கண் தானத்திற்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட் டன. இந்நிகழ்வில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர்  மரு.அசோகன், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.கண்ணன்,  துணை முதல்வர் மருவிஜயலெட்சுமி, மாவட்ட திட்ட மேலாளர் (பார்வை  இழப்பு தடுப்பு சங்கம்) மரு.சிவக்குமார், கல்லூரி பேராசிரியர்கள்,  செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.