tamilnadu

img

ராணுவ வீரரை தாக்கிய காவல் கண்காணிப்பாளர்

இளம்பிள்ளை, பிப்.19- எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆலச்சம் பாளையம் 26 ஆவது வார்டில் தனது வாக் கினை  பதிவு செய்ய வந்த ராணுவ வீரரை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தாக்கியதால், ஆவேசமடைந்த அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட் டது.   சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக் குட்பட்ட 59 வாக்குச்சாவடி மையங்களில் 17 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமா னவை என அறிவிக்கப்பட்ட நிலையில், எடப் பாடி ஆலச்சம்பாளையத்திலுள்ள 24,25,26 ஆகிய வார்டுகளில் திமுக, அதிமுக உள் ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அதிக அளவில் திரண்டு உள்ளதாக தகவலறிந்து வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஸ்ரீ அபிநவ் கூட்டத்தை கலைக்க முற்பட் டுள்ளார். அப்போது, காவல்துறையினர் தடி யடி நடத்த முயன்றபோது வாக்குப் பதிவு  செய்ய நின்றுகொண்டிருந்த அதே பகுதி யைச் சேர்ந்த ராணுவ வீரர் பாண்டிகணேஷ்  என்பவர் அடிக்காதீர்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீ அபினவ் கையை பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த காவல் கண் காணிப்பாளர் அந்த ராணுவ வீரரின் கன்னத் தில் அறைந்து அவரை தாக்கி வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து செல்ல  முயன்றுள்ளார். இதனால், ஆவேசமடைந்த  ராணுவ வீரரின் உறவினர்கள் அந்த வாக னத்தை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனை தொடர்ந்து, தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மேற்கு  மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகண பதி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஸ்ரீ அபிநவ்விடம் பேச்சுவார்த்தை நடத்தி பாண்டியன் கணேஷ்சை விடுவிப்ப தாக கூறியதை அடுத்து அவரது உறவினர் கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக, பதற்றமான சூழல் நிலவியது.