tamilnadu

img

கந்தர்வகோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைத்திடுக!

கந்தர்வகோட்டையில் அனைத்து  மகளிர் காவல் நிலையம் அமைத்திடுக!

புதுக்கோட்டை, ஜூலை 2 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டு மென அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்க ஒன்றிய மாநாடு வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றிய மாநாடு தச்சங்குறிச்சியில் புதன் கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் கே.சுதா தலைமை வகித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் ஆர்.கவிதா வேலை அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் கே. சாந்தி, விதொச ஒன்றியச் செயலாளர் கே.சித்திரைவேல், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் என்.குமரேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாவட்டச் செயலாளர் பி.சுசிலா  நிறைவுரையாற்றினார். ஒன்றியத் தலை வராக எஸ்.லதா, செயலாளராக கே. சுதா, பொருளாளராக வி.ராஜலெட்சுமி, துணைத் தலைவர்களாக சி.ராஜாத்தி,