தேனி, ஜூன்.23- சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங் கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை அவமதிப்பு செய்து, தண்ணீர் பாட்டில் வீசி தாக்கப்பட்ட தைக் கண்டித்து ஜூன் 23 வியாழ னன்று தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கட மலைக்குண்டில் எடப்பாடி பழனி சாமி உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . கடமலைக்குண்டில் அம்மா பேரவை செயலாளர் காளீஸ் வரன் தலைமையில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை எரித்தனர். தேனியில் அதிமுக நிர்வாகி பொன்சு தலைமையில் அதிமுக வினர் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து உருவ பொம்மையை பறித்துச் சென்றனர். பின்னர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக முழக்க மிட்டனர் . பெரியகுளத்தில் நாடாளு மன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே 30ஆவது வார்டு செயலா ளர் அன்பு தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .போடியில் நகர் மன்ற உறுப்பினர் ஜெகநாதன் தலைமையில் கட்டபொம்மன் சிலை அருகே 40 பெண்கள் உட்பட 80 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாளையத்தில் கிராம சாவடி அருகே தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தினேஷ் தலை மையில் 30 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.