tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆர்எஸ்எஸ் சொல்வதைச் செய்யும் இபிஎஸ்

சென்னை: “அதிமுக திராவிட கட்சி அல்ல, சங்கி களின் கட்சி. ஆர்எஸ்எஸ், பாஜக என்ன சொல்கிறதோ அதை இபிஎஸ் செய்கிறார். அதிமுக திராவிட கட்சி என் பது மலையேறி பல ஆண்டு கள் ஆகிவிட்டது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெரு ந்தகை எம்எல்ஏ சாடியுள்  ளார். “அடுத்த தலைமுறை மக்களுக்காக அறநிலை யத்துறை சார்பில் கல்வி நிறுவனம் ஆரம்பித்ததில் என்ன தவறு” என்றும் அவர் கேட்டுள்ளார்.

கால்பந்தாட்ட  சங்கத்தேர்தல் ரத்து

சென்னை: தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்திற்கு கடந்த மே மாதத்தில் தேர் தல் நடத்தப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொட ரப்பட்ட நிலையில், மறு தேர்தல் நடத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பி னர்களின் இறுதிப் பட்டி யலை ஜூலை 21-ஆம் தேதிக் குள் தயாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும், தேர்தல் நடைமுறைகளை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முடித்து இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இயல்பைவிட குறைந்த பருவமழை

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை ஜூலை 10 வரை இயல்பை விட 6 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 69 மி.மீ மழை பொழியும் நிலையில் தற்போது வரை 64.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் இயல்பை விட 11 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது. இயல்பாக 91.8 மி.மீ. பெய்யும் நிலையில் 102.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

பி.எட். படிப்பு   அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூ ரிகளில் பி.எட்., மாண வர்கள் சேர்க்கைக்கு ஜூலை  10 ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு நிறை வடைந்த நிலையில், ஜூலை  21 வரைக்கும் கால நீட்டிப்பு செய்து உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளி யிட்டிருக்கிறார்.