tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘தெற்கிலிருந்து சூரியன்’ நூலின்  ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடு

சென்னை: ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்ற நூலின்  ஆங்கில மொழிபெயர்ப்பு (“A Sun from the South”) வெள்ளிக் கிழமையன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின் கீழ், கே.எஸ்.எல். மீடியாவுடன் இணைந்து கூட்டு வெளியீடாக கொண்டு வந்துள்ள இந்த நூலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மரு. பி. சந்திரமோகன், தமிழ்நாடு  பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) மரு. மா. ஆர்த்தி, உதவி இயக்குநர் முனைவர்  ப. சரவணன், இந்து தமிழ்த் திசை துணை ஆசிரியர் ஏ.  வள்ளியப்பன், நூலின் மொழிபெயர்ப்பாளர் ஆர். விஜய சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேன்மொழி சௌந்தர்ராஜனுக்கு ‘வைக்கம் சமூக நீதி விருது’

சென்னை: அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தலித்  சிவில் உரிமைகள் மற்றும் சமூக நீதிச் செயல்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜனுக்கு 2025-ஆம் ஆண்டுக் கான தமிழக அரசின் ‘வைக்கம் சமூக நீதி விருது’ அறி விக்கப்பட்டுள்ளது. தென்மொழி சௌந்தரராஜனின் பூர்வீகம் மதுரை மாவட்டமாகும். இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், அங்கு விளிம்புநிலை மக்களின் உரி மைக்காகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், இவர் ‘சமத்துவ ஆய்வகங்கள்’ என்ற சிவில் உரிமை  அமைப்பை நிறுவியுள்ளார். வைக்கம் விருதை தமிழக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் வழங்க வுள்ளார். இந்த விருது ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் பதக்கமும் கொண்டது.

மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கல்

சென்னை: நோய் கண்காணிப்பு பணிகள், ஆரம்ப சுகா தார நிலைய ஆய்வு, வட்டார அளவிலான ஆய்வு கூட்டம்,  இதர கள ஆய்வு போன்ற பணிகளை மாவட்ட சுகாதார அலு வலர்கள் தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, மாவட்ட சுகாதார அலுவலர்களின் பயன்பாட்டிற்கு வாகனம் இன்றியமையாததாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தின் மாவட்ட சுகாதார  அலுவலர்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு சுகாதார திட்ட  நிதியின் கீழ் 4 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் 45  புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன. இவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை யன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிர மணியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச்  செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், தமிழ்நாடு சுகா தாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர் மரு. சு. வினீத், பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் மரு. எ. சோம சுந்தரம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

‘முன்னின்று உயிர்நீத்த மருதிருவரின் வரலாறு’

சென்னை: ஆங்கி லேய ஆட்சிக்கு எதிராகப்  போரிட்ட மருது சகோத ரர்கள் 24.10.1801 அன்று தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் நினைவு தினத்தையொட்டி முதல மைச்சர் மு.க. ஸ்டாலின்,  ‘எக்ஸ்’ பக்கத்தில் புக ழஞ்சலி செலுத்தியுள்ளார். “சிவகங்கைச் சீமையின்  வீரத்துக்கு எடுத்துக்காட் டாக இம்மண்ணில் நிலைத் திருக்கும் மருது சகோத ரர்கள் நினைவு நாள்.  ஆங்கிலேய ஆதிக்கத் துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும்  உணர்வை அந்நாளி லேயே விதைத்து, தலை சிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்த மிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்” என  முதல்வர் தெரிவித்து உள்ளார்.