அடிப்படை வசதி செய்து தர சிஐடியு இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் கோரிக்கை
உடுமலை, அக்.10- உடுமலை சிஐடியு இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் சார்பாக நகராட்சி ஆணையாளரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, உடுமலை நகராட்சி பகுதியில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சரி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப டுவதை தடுக்க வேண்டும். நகரில் இன்ஜினியரிங் தொழில் அதிகமாக செய்யும் இடமான கலிபுல்லா லே-அவுட் பகுதி யில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கூறப் பட்டுள்ளது. இதில் உடுமலை சிஐடியு இன்ஜினியரிங் தொழிலாளர் சங் கத்தலைவர் தண்டபாணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், உடுமலை இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க செயலாளர் ரஹமத் துல்லா, துணைச் செயலாளர் கவுஸ் மைதீன் மற்றும் கட்சி யின் உடுமலை நகரக்கமிட்டி உறுப்பினர்கள் சக்திவேல், தோழன் ராஜா, வசந்தி, கிளைச்செயலாளர்கள் ராஜன், முரு கானந்தம், ஆறுமுகம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.