tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்தப்படாது

பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கான கட்டணத்தை ஒரு செமஸ்டருக்கு குறைந்த பட்சம் ரூ. 79 ஆயிரத்து 600 முதல் அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 89 ஆயிரம் 800 வரை உயர்த்தி ஒன்றிய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதேபோல, பாலி டெக்னிக் கல்லூரிகளில் வழங்கப்படும் டிப்ளமோ படிப்புகளுக்கும் ஒரு செமஸ்டருக்கு ரூ. 67 ஆயி ரத்து 900 முதல் ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900  வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு குறைந்து  வசூலிக்கக் கூடாது என்றும் ஒன்றிய அரசு உத்தர விட்டது. இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். கடந்த ஆண்டு இருந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் ஷாரூக்கான் மகன் விடுவிப்பு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன்  ஆர்யன் கான், கடந்த 2021-ஆம் ஆண்டு  அக்டோபர் 2-ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந் தார். இந்நிலையில், ஆர்யன் கானை போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) வெள்ளிக் கிழமையன்று வழக்கிலிருந்து விடுவித்து உள்ளது. “சோதனையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் குற்றவாளி என பெயரிடப்படவில்லை. அவருக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் ஏஜென்சி யால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியக வட்டாரங்கள் தெரிவித்து ள்ளன. போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கான் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா 2001 முதல் 2011 வரை ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தபோது, 94 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக கூறி அவர்மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த பணமோசடி வழக்கு விசாரணைக்காக மே 31-ஆம் ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலு வலகத்தில் நேரில் ஆஜராகுமாறு பரூக் அப்துல்லா விற்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மே 30-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரிய லூர், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

‘பாஜக-வினர் எப்போதுமே பெண்களுக்கு எதிரானவர்கள்’

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேவை, அரசியலில் ஈடுபடுவதை விட்டு வீட்டுக்குச் சென்று சமைக்குமாறு மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கூறியதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சுப்ரியா சுலேவின் கணவர் சதானந்த் சுலேவும் டுவிட்டரில் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். “இவர்கள் (பாஜகவினர்) என்றுமே பெண் வெறுப்பாளர்களாகவும், தங்களால் முடிந்தபோதெல்லாம் பெண்களை இழிவுபடுத்தி வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். என் மனைவி ஒரு குடும்பத் தலைவியாகவும், தாயாகவும், வெற்றிகரமான அரசியல்வாதியாகவும், கடும் உழைப்பாளியாகவும், திறமைவாய்ந்த பெண்ணாகவும் இந்தியாவில் இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். இந்த சம்பவம் ஒட்டுமொத்த பெண்களுக்கும் அவமானம்” என்று சதானந்த் சுலே குறிப்பிட்டுள்ளார்.

அகண்ட பாரதமே குறிக்கோள்: ஆளுநர் ரவி பேச்சு 

திருவாரூரிலுள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில், புதிய கல்விக் கொள்கை தொடர்பான இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கை வெள்ளிக்கிழமை யன்று தொடங்கி வைத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார். அப்போது, “மொழிகள் பல  பேசினாலும் அகண்ட பாரதம் என்பதே நமது குறிக் கோள்” என்று ஆர்எஸ்எஸ்-ஸின் நிகழ்ச்சி நிரலை ஒப்பித்துள்ளார். கருத்தரங்கில் நாட்டிலுள்ள 38 மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், என்ஐடி மற்றும் ஐஐடி இயக்குநா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

;