tamilnadu

img

பொறியியல் பொது கலந்தாய்வு தொடக்கம்

பொறியியல் பொது கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) தொடங்கியது. முதல் சுற்று பொறியியல் பொது  கலந்தாய்வில் 39,145 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 417 பொறியியல் கல்லூரிகளில் 1,90,166 அரசு ஓதுக்கீடு இடங்கள் உள்ளன. நடப்பாண்டு கலந்தாய்விற்கு 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2.41 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. 3 கட்டங்களாக நடைபெறும் பொறியியல் கலந் தாய்வு ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நிகழாண்டில் 144 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆஃப்  மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களில் 139 பேர் தமிழ்நாடு  மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள். பொறியியல் கலந் தாய்வு தொடர்பான விவரங்களை www.tneaonline.org இணையதளத்தில் அறியலாம்.