சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை: சென்னையில் கே.கே. நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்திற்கு 2 வாகனங்களில் வந்த 8 அதி காரிகள், தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் துப்பாக்கி ஏந்திய 2 காவ லர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். தியாகராய நகரில் ஆடிட்டர் விஜயராகவன் என்பவரது வீட்டிற்கு அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். ஆடிட்டர் விஜயராகவன் கடந்த ஆண்டு இறந்துவிட்டார் என்பது தெரியவந்ததால் சோதனை நடத்தாமல் அதிகாரிகள் திரும்பினர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சோதனை முழுமையாக நிறை வடைந்த பிறகே முழு விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றார் சசிகாந்த் செந்தில்
சென்னை: தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்காமல் இருப்ப தைக் கண்டித்து திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கி ரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மேற்கொண்ட உண்ணா விரதப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்ட தால், தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட பாஜக அரசு செவிமடுக்க மறுத்து வருகிறது என்று விமர்சித்துள்ளார்.
2,511 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு
சென்னை: தமிழ்நாட்டில், 2023ஆம் ஆண்டு ஆசிரி யர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு பணி நியமனக் கலந்தாய்வு அறி விக்கப்பட்டுள்ளது. 2,511 பணியிடங்களை நிரப்புவதற்காக செப்டம்பர் 3, 4 தேதிகளில் பணி நியமனக் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தகுதி பெற்று 2,500 பேர் வரை வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்ட நிலையில், வழக்கு காரணமாக பணி நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில், உடனடியாக பணி நிய மன கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு சென் னையில் நடைபெறும்.
நடிகர் ரவி மோகன் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து
சென்னை: படத்தில் நடிப்பதற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன்பணத்தை திரும்பத் தர நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக் கோரி ‘பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரை வேட் லிமிடெட் நிறுவனம்’ சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதேபோல, கொடுத்த கால்ஷீட்டில் படத்தை தயாரிக்கா மல் தமக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ‘பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி நடிகர் ரவி மோகனும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக் களை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர் ரவி மோகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. ரவி மோகன் தரப்பில் வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, வழக்கை நடுவர் விசாரணைக்கு அனுப்பி, நடுவராக உயர் நீதிமன்ற நீதிபதி எம். சத்திய நாரா யணனை நியமித்து உத்தரவிட்டனர்.
அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற்ற 4 லட்சம் பேர்!
சென்னை: நடப்பாண் டில் 4 லட்சத்துக்கும் மேற் பட்டோர் அரசுப் பள்ளி களில் சேர்ந்துள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார். அரசுப் பள்ளி களில் சேர்க்கை குறை வாக உள்ளதாக அண் ணாமலை பழைய தரவு களை கூறுகிறார். மாண வர்களின் நலன் கருதி அண்ணாமலை கருத்து தெரிவித்தால் ஏற்றுக் கொள்ளப்படும். அரசுப் பள்ளிகள் என்பது சேவை அடிப்படையில் செயல்படக் கூடியது. பள்ளியில் 4 மாணவர்கள் இருந்தா லும் கட்டிடம் கட்டுவோம்; ஆசிரியர்களை நியமிப் போம் எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரி வித்துள்ளார்.
முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
சென்னை: ரூ. 98.25 கோடி முறைகேடு வழக் கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலு மணி மீண்டும் சேர்க்கப்பட் டுள்ளார்.சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கிய தில் ரூ.98.25 கோடி முறை கேடு செய்யப்பட்ட வழக் கில் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதால் அவர் மீது வழக்கு தொடர கடந்த 2024-இல் பேரவைத் தலைவர் அனு மதி அளித்திருந்தார். இந்நி லையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணிக்கு எதிராக ஆதா ரங்கள் உள்ளதாக மீண்டும் வழக்குப் பதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான புதிய புயல் சின்னம்
சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செவ்வா யன்று காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். மேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா நோக்கி செல்லும். இப்புயல் சின்னம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு வடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச் சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.