tamilnadu

img

பணிப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுக! வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பணிப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுக! வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

தஞ்சாவூர், ஆக.13 -  வருவாய்த் துறையில் பணியாற்றும் ஊழியர்களை பாதுகாத்திட பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய்த் துறை பணிகளை செம்மையாக செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். வருவாய் துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.  அனைத்து நிலை பணிகளிலும் வெளி முகமை, தற்காலிகம், தொகுப்பூதிய நியமனங்களை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை அலுவலகப் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க வட்டத் தலைவர் ஜெயதுரை தலைமை வகித்தார்.  கூடுதல் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் சீனிவாசன், தேர்தல் துணை வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகி அசரப் நன்றி கூறினார்.

பாபநாசம் அருகே, அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலை டயக்னோஸ்டிக் சென்டர், அம்மாபேட்டை லயன்ஸ் சங்கம் இணைந்து கர்ப்பிணி பெண்களுக்கான இலவச தைராய்டு பரிசோதனை முகாமை நடத்தின. இதில் மருத்துவர்கள் அஜந்தன், வெங்கடேஷ் குமார், அப்துல் ரகுமான், லயன்ஸ் கிளப் தலைவர் ரமேஷ், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சரவண வேலன், வட்டாரத் தலைவர் முரளி, திருநெறி தமிழ் மன்றத் தலைவர் ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் 75 கர்ப்பிணிகளுக்கு தைராய்டு பரிசோதனை நடந்தது.