28 நாட்களாக யானைக்கு சிகிச்சை
மேட்டுப்பாளையம், செப்.16- சிறுமுகை வனப்பகுதியில் உடல் மெலிந்து சோர்வுடன் காணப்பட்ட காட்டுயானைக்கு, 28 நாட்களாக வனத்துறையினர் தொடர் சிகிச்சையளித்து கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை காப்பு காட்டின் எல்லைப்பகுதியில் சிறுமுகை வனத்துறையினர் கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று ஆண் காட்டு யானை ஒன்று உடல் மெலிந்து சோர்வுடன் காணப்பட்டது. இதனையடுத்து, வனத்துறை மருத்துவக் குழுவினர் யானையின் உடல்நலம் கண்காணிக்கப்பட்டதில் யானை யின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை என்பதால் அதன் உள் உறுப்புகள் ஏதேனும் பாதிக்கப் பட்டிருக்கலாம் என கண்டறிந்தனர். இதனையடுத்து, மருத்துவக் குழுவினர் யானைக்கு பழங்கள் மூலமாக ஆண்ட்டிபயாடிக் மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், குடற்புழு மாத்திரைகள் மற்றும் கல்லீரல் புத்துணர்வு வைட்டமின் போன்றவற்றை கொடுத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து 28 நாட்கள் யானைக்கு பிடித்தமான பழங்களின் உள்ளே மருந்துகள் வைத்து உண்ண கொடுத்ததால் யானை சற்றே உடல் நலம் பெற்று வருகிறது. சோர்வு நீங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுறுசறுப்புடன் நடந்து செல்கி றது. ஆனால் தனது யானை கூட்டத்துடன் இணைந்து அடர்ந்த காட்டுக்குள் செல்லாமல் இருப்பதால் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.