tamilnadu

img

யானை உயிரிழப்பு

யானை உயிரிழப்பு

உதகை, செப்.3- மசினகுடி- தெப்பக்காடு நெடுஞ்சாலையில் யானை உயிரிழந்து கிடந்தது தொடர் பாக வனத் துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், தெப் பக்காடு- மசினகுடி சாலை யில் நாள்தோறும் ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இச்சாலையின் நடுவே செவ் வாயன்று காலை யானை இறந்துகிடப்பது. தொடர் பாக வனத் துறைக்கு அப் பகுதி மக்கள் தகவல் தெரி வித்தனர். தகவலறிந்து சென்ற மசினகுடி வனத் துறையினர் சோதனை நடத் தியதில், இறந்தது தந்தம்  இல்லாத ஆண் மக்னா  யானை என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் வர வழைக்கப்பட்டு மக்னா யானையின் உடல் அப்புறப் படுத்தப்பட்டது. இதுகுறித்து வனத்துறை யினர் கூறுகையில், உயிரி ழந்த யானைக்கு 50 வயது இருக்கலாம். உடலில் பல் வேறு பகுதிகளில் காயம் உள்ளதால் யானையின் உயிரிழப்பில் பல்வேறு சந் தேகங்கள் உள்ளன. உடற் கூறாய்வுக்கு பின்னரே யானையின் இறப்பு குறித்து  தெரியவரும், என்றனர்.