திருப்பத்தூரில் மின் ஊழியர்கள் மறியல் போராட்டம்
மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருப்பத்தூர் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் வட்ட தலைவர் ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ஜோதி, சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கேசவன், சிபிஎம் தாலுகா செயலாளர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு மின்சார வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், 950 அரசாணைபடி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் திட்டச் செயலாளர் சந்திரசேகரன், திட்டப் பொருளாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.