tamilnadu

img

கரூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

கரூர், ஜூலை 31-  தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மின் வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.விஜயகுமார் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் கா.தனபால் கண்டன உரையாற்றினார்.  மாவட்ட நிர்வாகிகள் கண்ணதாசன், துரை, பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.