tamilnadu

img

முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமையை பறிக்காதீர்!

புதுதில்லி, பிப். 9 - மாணவி லாவண்யா மரணத்தில் மதமாற்ற மர்மம் இருக்கிறதா என்று பார்க்க தமிழ்நாட்டிற்கு ஓடிவந்த குழந்தைகள் ஆணையம், முஸ்லிம் மாணவியை முற்றுகையிட்டு மூர்க்கத்தனமான முறையில் கூச்சலிட்டு மதவெறியர்கள் அட்டூழியம் நடத்திய  கர்நாடகத்திற்கு செல்ல மறுப்பது ஏன் என்று, புதனன்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். புதனன்று மாலை இதுதொடர்பாக அவர் மக்களவையில் பேசிய போது,  கர்நாடக பாஜக எம்.பி.க்கள் எழுந்துநின்று கூச்சலிட்டு தகராறு செய்தனர். அதற்கு பதிலடியாக, சு.வெங்கடேசனின் பேச்சுக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, செந்தில் மற்றும் இதர மாநிலக் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர். முன்னதாக சு.வெங்கடேசன் பேசியதாவது: ஜனவரி 15 ஆம்தேதி தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சியில் சிறார் நிகழ்ச்சி ஒன்று ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சி பிரதமரின் மாண்பை குறைத்து விட்டது என்று சொல்லி ஒன்றிய இணையமைச்சர் அவராகவே முன்வந்து புகாரினை கேட்டு வாங்கி அமைச்சகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட தொலைகாட்சி நிலையத்துக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்.

இன்று கர்நாடகாவில் என்ன நடக்கிறது? ஹிஜாப் அணிவதை முன்வைத்து நடைபெறும் வெறுப்பரசியல் மாணவ சமூகத்தினையே கூறுபோட்டுக் கொண்டி ருக்கிறது. தன்வயதையொத்த மாணவர்களோடு கலந்துரையாடி சமூகமயமாகும் தேவையிலிருக்கும் மாணவ சமூகத்தின் முன்னுரிமையை குலைத்துப் போடுகிறார்கள். சிறார்கள் தலையில் கிரீடம் அணியவும் விடமாட்டீர்கள், மாணவிகள் ஹிஜாப் அணியவும் விடமாட்டீர்கள். பள்ளிக்குழந்தைகள் நாடகம் போடுவதும், கல்லூரி மாணவர்கள் ஆடை அணிவதும் உங்களின் உத்தரவின் படிதான் நடக்க வேண்டுமா? லாவண்யா மரணத்தில் மதமாற்ற மர்மம் இருக்கிறதா என்று துப்புதுலங்க ஓடிய குழந்தைகள் ஆணையம் கர்நாடகத்துக்கு ஏன் செல்ல மறுக்கிறது? சிறுவர்களின் நாடகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய அரசு இப்பொழுது ஏன் பேச மறுக்கிறது? “துண்டு துணியைவைத்து எங்கள் கல்வி உரிமையை பறிக்காதீர்கள்” என்று  முழங்கினாள் வீரப்பெண் முஸ்கான். “சக மாணவர்களுக்கு தண்டனை வேண்டாம், செய்தது தவறு என்று உணர்ந்தால் போதும்” என்று கூறியுள்ளார் முஸ்கான். அந்த வார்த்தை எந்த மதவெறியையும் மண்டியிடச்செய்யும் ஆற்றல் கொண்டது. ஏனெனில் இது இராமனின் வார்த்தை, நபிகளின் வார்த்தை, ஏசுவின் வார்த்தை. எதிரிகளை வீழ்த்த மனிதர்கள் கண்டறிந்த மகத்தான வார்த்தை.

ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எளமரம் கரீம் எம்.பி., கடிதம்

புதுதில்லி, பிப்.9- மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, கர்நாடக அரசு உரிய நட வடிக்கைகள் எடுத்திட அறிவுறுத்தக்  கோரியும், நாட்டில் மத நல்லிணக்கத் திற்குக் குந்தகம் விளைவிக்கும் விதத்தில் தேவையற்ற மோதல் களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் கோரி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் எளமரம் கரீம் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில் கூறியிருப்ப தாவது: கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கொள்வதற்கான உரிமையைப் பறித்துள்ள துரதிர்ஷ்டவசமான நிகழ்வு கள் மீது தங்கள் உடனடித் தலை யீட்டைக் கோரி இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறேன். 

மாநிலத்தில் மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும்  என்கிற நோக்க த்துடனேயே தேவையற்றமுறையில் இந்த மோதல் உருவாக்கப்பட்டி ருக்கிறது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒருசில அரசு கல்வி நிறு வனங்களில் முஸ்லிம் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு வளா கத்திற்குள் வருவதற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனை தொடங்கியிருக்கிறது. இதுநாள்வரையிலும் முஸ்லிம் மாணவர்கள் எவ்விதமான ஆட்சேபணையுமின்றி ஹிஜாப்  அணிந்து கொண்டு வந்திருக் கிறார்கள். அவர்கள் பொது உடை  விதிகளை (common dress code) மீறியிருக்கிறார்கள் என்று கூறி  தற்போது அனுமதி மறுக்கப்பட்டி ருக்கிறது. இது முற்றிலும் தவ றான அறிக்கையாகும்.

முஸ்லிம் மாணவிகள் பல ஆண்டுகளாகவே தங்களுடைய சீருடையுடன் ஹிஜாப்பும் அணிந்து வந்திருக்கிறார்கள். சில கல்வி நிறுவனங்களில் இத்தகைய ஹிஜாப்பின் வண்ணம் கூட நிர்ண யிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இந்தப் பிரச்சனையில் பல பத்தாண்டு காலமாகவே எந்தப் பிரச்சனை யும் ஏற்பட்டது இல்லை. இப்போது வேண்டுமென்றே இந்தப்பிரச்ச னை உருவாக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி மதவெறி உணர்வுகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இது செய்யப்பட்டிருக்கிறது.

எனவே, முன்பிருந்த நிலையைத் தொடரச் செய்வதற்கு கர்நாடக மாநில அரசாங்கம் உத்தரவு பிறப்பித்து இப்போது விசிறிவிடப்பட்டுள்ள மதவெறித் தீயை அணைத்திட உரிய நட வடிக்கைகளை கர்நாடக மாநில அரசு எடுத்திட வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.  முஸ்லிம் மாணவிகள் கல்வி  கற்பதற்கான உரிமை எந்தவிதத் திலும் மறுக்கப்படக்கூடாது. அவர்கள் இதுநாள்வரையிலும் அணிந்துவந்ததைப்போலவே தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வரும் உரிமையை அவர்களிடம் இருந்து பறித்திடக் கூடாது. மாணவிகள் வகுப்புகளுக்கு வரும் உரிமை பிரதானமானதாகும். அதனை எப்பாடுபட்டாகிலும் பாதுகாத்திட வேண்டும். 

மதவெறித் தீயை விசிறி விடுவதற்கான எந்த நடவடிக்கை யும் மற்றும் மக்கள் மத்தியில் பிளவை உண்டாக்குவதற்கான எந்த நடவடிக்கையும் கடும் நட வடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் தாங்கள் உடனடியாக இதில்  தலையிட வேண்டும். மாணவர் களின் உரிமைகளைப் பாது காத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும்,  நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளை விக்கக்கூடிய விதத்தில் நடைபெற்றுள்ள தேவையற்ற இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுமாறும் கர்நாடக மாநில அரசுக்கு அறிவுரை வழங்கிடக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எளமரம் கரீம் அக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள் ளார்.        (ந.நி.)