சமையல் எரிவாயு லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு எதிராக வழக்கு
சென்னை: தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரி மையாளர்கள் சங்கம் 1,500 லாரிகளுக்கு லோடு ஏற்ற அனுமதி கோரி மூன்றாம் நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டு வருகிறது. இந்த சூழலில் 5,500 சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் இயக்கப்படாததால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில் சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் நடத்தி வரும் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில், “எல்.பி.ஜி. கேஸ் என்பது அத்தியாவசிய பொருள் என்றும், அதை விநியோகம் செய்யா மல் இருப்பது சட்டவிரோதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்பிஜி விநியோகம் செய்ய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு அரசு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விஜய் தலைமையை ஏற்க எடப்பாடி தயார்: டிடிவி தினகரன்
சென்னை: விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி கூட்டங்களில் அதிமுக வினரே தவெக கொடியை ஏந்தியுள்ளனர். விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதற்காக கூட்டங்களில் தவெக கொடியை காண்பிக்கின்றனர். அதிமுக தொண்டரே தவெக கொடியை பிடித்திருப்பது பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ளது. எடப்பாடி பழனி சாமியை முன்னிறுத்தியதில் இருந்தே பாஜக கூட்டணி பலவீன மானது. விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார். விஜய் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாரானதில் இருந்து, அதிமுக பல வீனமானது உறுதியாகியுள்ளது. அரசியலில் தரம் தாழ்ந்து செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி” என்று விமர்சித்தார்.
மோதல் உச்ச கட்டம்
சென்னை: பாமகவில் தந்தை-மகன் இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக இளைஞர் அணி தலைவராக தமிழ்குமரனை (ஜி.கே. மணியின் மகன்) ராமதாஸ் கடந்த வாரம் நியமனம் செய்தார். இதற்கான ஆணையை தைலாபுரம் தோட்டத்தில் ராம தாஸ், நிர்வாகக்குழு உறுப்பினர் காந்திமதி ஆகியோர் தமிழ்குமரனிடம் வழங்கினர். தற்போது இதற்கு பதிலடி யாக பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் இளைஞரணி தலைவ ராக செஞ்சி முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் நியமிக்கப் பட்டார்.
பாஜகவில் காளியம்மாள்?
நெல்லை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளி யம்மாள், அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், அந்த கட்சியில் இணைவார், இந்த கட்சியில் சேருவார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சனிக்கிழமை (அக்.11) அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேட்டி யளித்த அவர், “நிச்சயமாக ஏதாவது ஒரு அரசியல் கட்சி யோடுதான் தேர்தல் நேரப் பயணம் இருக்கும். அது எந்தக் கட்சி என்பதை பிறகு சொல்வேன்” என்றார். இதற்கிடையில், காளியம்மாளுடனான சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலை வர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐடி சோதனை நிறைவு
சென்னை: கோ கலர்ஸ் ஆடையகத்தின் உரிமையாளர் வீடு களில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பிர காஷ், அவரது சகோ தரர் வீடுகளில் 5 நாட்கள் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது.
எஸ்ஐடி விசாரணை
சேலம்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபனி டம் எஸ்.ஐ.டி. விசா ரணை நடத்தியது. கரூர் நெரிசல் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கிறது.
20 வால்வோ பேருந்துகள்
சென்னை: வரும் டிசம்பர் மாதத்துக்குள் முதற்கட்டமாக 20 வால்வோ பேருந்து களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பயணிகளின் வசதிக் காகவும் பாதுகாப்புக் காகவும் வால்வோ பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்து உள்ளது.