tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: நூலக கட்டடம் சீரமைப்பு

தீக்கதிர் செய்தி எதிரொலி: நூலக கட்டடம் சீரமைப்பு

பாபநாசம், செப். 12-  பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்த்த ரெகுநாதபுரம் ஊராட்சியில் உள்ள நூலக கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது குறித்த செய்தி தீக்கதிரில் வெளியானது.  இதைத் தொடர்ந்து, நூலக கட்டடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. நூலக கட்டடத்தை தரமான முறையில் சீரமைப்பதுடன், பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழ், மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி பொது மக்கள் நன்றி தெரித்தனர்.