tamilnadu

img

2024 தோல்வி பயம் காரணமாக, மோடி அரசு அரங்கேற்றிய நாடகமே பெண்கள் இடஒதுக்கீடு!

திருப்பூர், செப். 26 - 2024 மக்களவைத் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிடுமோ, என்ற அச்சம் காரணமாகவே, மோடி அரசு பெண்கள் இடஒதுக்கீட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக, மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.கே. ஸ்ரீமதி விமர்சித்துள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில், ‘மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடு’ செவ்வாயன்று நடைபெற்றது. மாதர்  சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ். பவித்திரா தேவி தலைமை ஏற்றார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பானுமதி வரவேற்றார்.  மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவரும், கேரள மாநில முன்னாள் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான, பி.கே. ஸ்ரீமதி மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார். 

மக்களை போதைக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் கூட்டம்

அப்போது அவர் பேசுகையில், போதை எதிர்ப்பு  இயக்கத்தை, இந்திய அளவில் மிக முக்கிய பிரச்சனையாக மாதர் சங்கம் கையில் எடுத்துள்ளது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பட்ட மக்களையும் பாதிக்கும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக, போதை  எதிர்ப்பு மாநாடு நடத்துவது மிகவும் அவசியமானது.  மது, கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை, மருந்து (ட்ரக்)என்று அழைப்பதற்கான காரணம். அது ஒரு மயக்க நிலையை உருவாக்குவதால்தான். கஞ்சா, போதை ஊசி, எம்டி போன்ற போதைப் பொருட் களை விற்பனை செய்வதற்கு என்றே லாபிகள் செயல்படுகின்றன. மக்களை போதைக்கு அடிமையாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிப்பது இந்தியா முழுவதும் அதி  தீவிரமாக நடைபெற்று வருகிறது. போதையில் உள்ள வர்கள் இந்த பூமியில் இருப்பதில்லை. வேறு ஒரு உலகத்தில் உள்ளனர். இங்குள்ள பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதாக நினைக்கின்றனர். சமூகத்தில் நிலவுவதைப் பற்றி கவலை கொள்வதில்லை. 

போதை ஆண்களால் பெண்களே அதிகம் பாதிப்பு

ஆண்கள் மதுவுக்கு அடிமையாவதால் நமது வீட்டுப் பெண்கள் படும் துன்பங்களை அரசுக்கு தெரி யப்படுத்த வேண்டும். இந்தியச் சமூகத்தில் நடை பெறும் கொலை, கொள்ளை போன்ற அனைத்து குற்ற சம்பவங்களும், பெரும்பாலும் போதைக்கு அடிமையாகி உள்ளவர்களால்தான் நடைபெறு கிறது. பெண் குழந்தைகள் மீது குடும்பத்தினரே பாலியல் வன்கொடுமைகள் நடத்துகின்றனர். போதையில் இருப்பவர்களுக்கு உறவுமுறை கூட  தெரிவதில்லை. தந்தையே மகளை வல்லுறவுக்கு உள்ளாக்குவது போன்ற சம்பவங்கள் நடைபெறு கின்றன. இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். போதைக்கு எதிரான விழிப்பு ணர்வு பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும். போதையால், கணவனை இழந்து வாழும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விலைவாசி உயர்வால் துயரம் 

மோடியின் ஆட்சியில், விலைவாசி கடுமையாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருவர் சம்பாதித்து இருவர் குடும்பம் நடத்துவதே மிகவும் சிரமம் என்கிற நிலையே உள்ளது. மோடி ஆட்சிக்கு வந்ததி லிருந்து அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து இருக்கிறது. ரூ. 400 விற்கப்பட்ட கேஸ் சிலிண்டர் இப்போது ரூ. 1200-க்கு விற்கப்படுகிறது.  இந்த யதார்த்தத்தை உணர்ந்தே, கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தவுடன், கணவனை இழந்து வாழும் பெண்களுக்கு, குடும்பத்தை நடத்த உதவியாக மாதம் ரூ. 1600 வழங்கப்படுகிறது. 50 வயதை கடந்தும் திருமணம் ஆகாத பெண்களுக்கும் இந்தத் தொகை வழங்கப் படுவதை இடது ஜனநாயக முன்னணி அரசு உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டிலும், மாதர் சங்கம் இந்த கோரிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

அக்.5 -இல் தில்லியில் பேரணி

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிடுமோ என்ற பயம் பாஜக-வுக்கு வந்து விட்டது. இதனால், நாட்டில் 70 கோடிக்கும் அதிகமாக உள்ள பெண்களின் வாக்குகளைப் பெற மகளிர் மசோதாவை நிறைவேற்றி நாடகமாடுகின்றனர். மக்கள் விரோத, ஜனநாயக விரோத, பெண்கள் விரோத போக்கை கடைப்பிடிக்கும் பாஜக அரசுக்கு எதி ராக அக்டோபர் 5 அன்று மாதர் சங்கம் தில்லியில் எழுச்சிமிக்க பேரணி ஒன்றை நடத்த இருக்கிறது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு பி.கே. ஸ்ரீமதி உரையாற்றினார். முன்னதாக, போதை எதிர்ப்பு மாநாட்டின் அவ சியம் குறித்து, மாதர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் பி. சுகந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் எம். கிரிஜா ஆகியோர் உரையாற்றினர். மாதர் சங்கத்தின் திருப் பூர் மாவட்டச் செயலாளர் கே. சரஸ்வதி ஆய்வறிக்கை யை முன்வைத்தார். நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டச் செயலாளர்கள் ஏ.ஆர். ஆதிரா, டி. சுதா, பி. லலிதா, எஸ்.எம். தேவி, ஆர். மல்லிகா ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்த னர். மாநிலப் பொருளாளர் ஜி. பிரமிளா நிறைவுரை யாற்றினார். முடிவில் திருப்பூர் மாவட்டப் பொரு ளாளர் ஆர். கவிதா நன்றி கூறினார். இதில், மாதர் சங்கத்தின் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.