tamilnadu

img

போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், ஆக.30- திருச்செங்கோட்டில் நடைபெற்ற போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணியில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கந்தம்பாளையம் எஸ்கேவி பள்ளி மாணவ, மாணவிகள் 600க்கும் மேற்பட்டோர் சனியன்று போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட னர். முன்னதாக, தெரு நாடகம் நடத்தி போதைப்பொரு ளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு தொடங்கிய இப்பேரணியை, திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர் வளர்மதி கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்செங்கோடு வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி,  வேலூர் வழியாக வாலரைகேட் பகுதியில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று பேரணி நிறைவடைந்தது.