tamilnadu

img

டாக்டர் வே. வசந்தி தேவி காலமானார் முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் - நேரில் அஞ்சலி

டாக்டர் வே. வசந்தி தேவி காலமானார்

முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் - நேரில் அஞ்சலி

சென்னை, ஆக. 1 - சிறந்த கல்வியாளரும், பெண்ணிய வாதியும், சமூக செயற்பாட்டாளருமான டாக்டர் வே.வசந்தி தேவி கால மானார். அவருக்கு வயது 87. டாக்டர் வே.வசந்தி தேவி, சென்னை, வேளச்சேரி விஜயநகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார். டாக்டர் வே. வசந்தி தேவி, உறுதி யான இடதுசாரி சிந்தனையாளர் ஆவார். சென்னை பல்கலை.யில் முது கலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற அவர், 1992- 1998 வரை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலை. துணை வேந்தராகவும், 2002- 2005ஆம் ஆண்டு  வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். பெண்கள், குழந்தைகளின் கல்வி, உரிமைகளுக்காக தொடர்ந்து பணியாற்றி வந்த அவரது மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., உள்ளிட்ட அரசியல் கட்சித் தலை வர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று உடல் தானம் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, சனிக்கிழமை (ஆக.2) காலை  8.30 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு டாக்டர் வே. வசந்திதேவி யின் உடல் தானமாக வழங்கப்படு கிறது.