டாக்டர். கே.எம். செரியனின் பிறந்த நாள் இணை மருத்துவர்களின் தினமாக அறிவிப்பு
சென்னை, அக்.16- இந்திய சுகாதார துறை யில் முக்கிய பங்காற்றும் இணை மருத்துவர்களது இந்திய சங்கத்தின் (ஐஏபிஏ) 21-ஆவது ஆண்டு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இணை மருத்துவர்கள், தொழில் பணிக்கான தேசிய அங்கீகாரத்தை கொண்டாடும் நிகழ்வாக நடைபெற்ற இம்மாநாட்டில் நூற்றுக்கணக்கான இணை மருத்துவர்கள், கல்வியாளர்கள், சுகா தார தலைவர்கள் மற்றும் கொள்கை உருவாக்குனர் கள் பங்கேற்றனர். 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக அறுவை சிகிச்சைகளில் உதவுவது, தீவிர சிகிச்சைப் பிரிவு களை நிர்வகிப்பது, நோயாளிகளின் மருத்துவ வரலாறுகளை பதிவு செய்வது, நோயறிதல் செயல்பாடுகளை மேற்கொள்வது என பல்வேறு நடவடிக்கை களில் இணை மருத்து வர்கள் சிறப்பாக பணி யாற்றி வருகின்றனர். தொலைநோக்கு பார்வை கொண்ட இதய அறுவைசிகிச்சை நிபு ணரான டாக்டர். கே.எம். செரியன் 1990-களில் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் இணை மருத்துவர்கள் என்ற கருத்தாக்கத்தை முதன் முதலாக அறிமுகம் செய்ததை இந்த மாநாடு நினைவு கூர்ந்தது. மேலும் செரியன் பிறந்த நாளான மே 8-ஐ தேசிய இணை மருத்துவர்கள் தினமாக கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது . முன்னதாக இணை மருத்துவர்கள் மாநாட்டில் தலைமை விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எழிலன் நாகநாதன் கலந்து கொண்டார். இணை மருத்துவர்கள் பணி வரம்பை வரையறுத்தல், பயிற்சித் தரங்களை வலுப்படுத்துதல் மற்றும் மருத்துவரது உதவி யாளர்களை திறம்பட ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகள் குறித்து இந்த மாநாட்டில் விவா திக்கப்பட்டது என்று ஐஏபிஏ தலைவர் கோமதி சுந்தர் கூறினார்.
