வரதட்சணைக் கொடுமை ஒரே வாரத்தில் 2 ஆவது தற்கொலை
வரதட்சணைக் கொடுமையின் கார ணமாக கர்நாடக மாநிலத்தில் 28 வயதேயான பூஜா என்ற இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. வங்கியில் காசாளராக பணியாற்றி வந்த அப்பெண்ணுக்கும் தனியார் நிறுவ னத்தில் பணிபுரியும் நந்தீஷ் (32) என்பவ ருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர் ஆகஸ்ட் 30 அன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பூஜாவை அவரது கணவர், மாமியார் வரதட்ச ணைக் கேட்டு துன்புறுத்தியதாக தெரிய வந்துள்ளது. மேலும் கணவர் நந்தீஷ் பூஜா விற்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி சண்டை நிகழ்ந்துள்ளது. இதனால் மனமுடைந்த பூஜா கணவர், குழந்தை இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வர தட்சணை துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட் டுகளின் கீழ் நந்தீஷ், அவரது தாயார் சாந்தம்மா மற்றும் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், கர்நாடக மாநிலத்தின் சுத்த குண்டேபாளையத்தில் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக 27 வயது கர்ப்பிணி பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.