பேக்கேஜ் முறையில் ஒப்பந்தம் விடக் கூடாது!
சென்னை மன்றக் கூட்டத்தில் ஆர்.ஜெயராமன் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 31 - சாலை உள்ளிட்ட பணிகளை பேக்கேஜ் முறை யில் ஒப்பந்தம் விடக்கூடாது என்று சிபிஎம் 4வது வார்டு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வலியுறுத்தி னார். பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந் திரக் கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.ஜெயராமன் பேசியதாவது: அடிப்படை வசதிகளுக்கான பணிகளை செய்ய பேக்கேஜ் முறையில் ஒப்பந்தம் விடப்படு கிறது. இதனால் ஒப்பந்ததாரரிடம் அதிகாரிகளால் வேலை வாங்க முடியவில்லை. 4வது வார்டில் 72 தெருக்களில் பெயர் பலகையில் பெயர் ஒட்டுதல் பணியை ஒரு ஒப்பந்ததாரர் பேக்கேஜ் முறையில் எடுத்துள்ளார். 6 மாதமாக வேலை செய்யவில்லை. 32 தெரு பெயர் பலகைகளில் மட்டுமே ஒட்டும் பணியைச் செய்துள்ளார். அதை யும் முழுமையாகச் செய்யவில்லை. அதேபோன்று, 4 பேருந்து நிழற்குடை பரா மரிப்பு பணியை ஒரு ஒப்பந்ததாரர் எடுத்துள்ளார். ஒன்றில் கூட முழுமையாகப் பணி செய்யவில்லை. அம்மா உணவகம், அங்கன்வாடி மையம் பராமரிப்புப் பணிகளும் இதே நிலையில்தான் உள்ளது. 27 சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 12 சாலைகள் பணி முடிந்துள்ளது. 25 சாலைகள் மில்லிங் செய்து சாலை அமைக்கப்படா மல் உள்ளது. இதுகுறித்து கேட்டால் 3வது மண்டலத்தில் பணி நடக்கிறது என்கிறார்கள். எனவே, பேக்கேஜ் முறையில் ஒப்பந்தம் தருவதை கைவிட வேண்டும். மண்டல அளவில் ஒப்பந்தப் புள்ளி கோரினால் பணிகள் வேகமாக நடக்கும். மேலும் 8 சாலைகளில் பேருந்து தட சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் எப்போது கோரப்படும்? 36 சாலைகள் பிஆர்ஆர் செய்ய கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு எப்போது ஒப்பந்தப் புள்ளி கோரப்படும்? மழைக் காலத்திற்கு முன் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு பணிகள் விரைவாக நடைபெறுமா? 36 சாலை யோடு கூடுதலாக 8 சாலையை சேர்த்து அமைக்கப்படுமா? தூய்மைப் பணியாளர்கள் ராமநாதபுரம் நடுநிலைப் பள்ளிக்கு கூடுதலாக தூய்மைப் பணியாளர் நியமிக்க கடந்த மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனால் தூய்மைப் பணியாளர் நியமிக்கப் படவில்லை. ஏற்கெனவே பணியாற்றியவர்களும் நின்றுவிட்டனர். எனவே, துவக்கப்பள்ளி, நடு நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கு குறைந்தது 5 தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். 4வது வார்டில் மேட்டுத் தெரு மிகவும் பள்ளமாக உள்ளதால் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் சென்றுவிடுகிறது. அத்தெருவை உயர்த்தி, கால்வாய் கட்ட வடக்கு மண்டல ஆணையர் அறிவுறுத்தினார். மண்டல அலுவலர், மண்டலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தியும் பணிகள் நடைபெறவில்லை. பாலங்கள் கணேசபுரம் மேம்பாலம் பணி தொடர்பாக வடசென்னை குடியிருப்போர் நல சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ள ரயில்வே துறை,ரயில்வே பகுதியில் நடைபெற வேண்டிய பணி குறித்து மாநகராட்சி அணுகவில்லை என்று கூறியுள்ளது. நடைபயிற்சி செய்ய ஏதுவாக பூங்காக்களை காலை 4.30 மணிக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் பகுதி, தடை செய்யப்பட்ட பகுதி என தீர்மானிக்கும் அதிகாரம் நகர விற்பனை குழுவிற்குதான் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி பக்கத்திலேயே மூர் மார்கெட்டில் 21 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியது ஏன்? இது அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தாதா? தெருவிளக்கு கம்பங்கள் 4வது வார்டில் முருகப்பா நகர், ஜெய்ஹிந்த் நகர், மகாலட்சுமி நகர் பகுதிகளில் உள்ள தெரு விளக்கு கம்பங்கள் துருப்பிடித்துக் முறிந்து விழும் நிலையில் உள்ளன. அவற்றை மாற்ற 4 மாதங்களுக்கு முன்பே மின்துறைக்கு கடிதம் கொடுத்துவிட்டேன். மின்கம்பங்கள் எப்போது மாற்றப்படும்? 5 மினிமாக்ஸ் தெருவிளக்கு கோரி யிருந்தேன். அது எப்போது அமைக்கப்படும். மணலி விரைவுச் சாலை சென்னை துறைமுகத்தில் இருந்து பஞ்சட்டி வரை 6 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப் பட்டுள்ளது. அதில் சத்தியமூர்த்தி நகர் வரை அணுகு சாலை உள்ளது. துறைமுகத்தில் இருந்து பாரத் நகர் வரை அணுகுசாலை உள்ளது. இடையில் 2 கி.மீ. தூரம் அணுகு சாலை இல்லை. எனவே 2 கி.மீ. தூரத்திற்கு அணுகு சாலை அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச்சாலையில் உள்ள முல்லை நகர், ஜோதி நகர், சத்தியமூர்த்தி நகர் சந்திப்புகளில் சிக்னல் அமைக்க வேண்டும். ஓட்டுநர்கள் உயர்நீதிமன்றத் தீர்ப்பு 2011-2013 மற்றும் 2013-2015 ஆகிய காலங்க ளில் 480 நாட்கள் பணியாற்றிய 300 ஓட்டுநர்கள் பணியாற்றினர். அவர்கள் பணியாற்றியதற்கான ஆவணங்களை தொழிலாளர் ஆணையரிடம் சமர்ப்பித்தால், நிரந்தரப்படுத்தலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, 300 ஓட்டுநர்களை நிரந்தரம் செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, ஓட்டு நர்கள் தொடர்பாக மனு அளித்தால் பரிசீலிக்கப் படும் என்றார்.