மருத்துவர் பணி நிறைவு பாராட்டு விழா
பாபநாசம், ஆக.3 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜி.குமரவேல் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. பாபநாசத்தில் நடந்த விழாவில் கும்ப கோணம் எம்.எல்.ஏ அன்பழகன், தஞ்சாவூர் முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி, குடந்தை மாநகர துணைமேயர் சுப. தமிழழகன், தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் கோவி.அய்யாராசு, தாமரைச்செல்வன், பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, திமுக பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், தமிழக முன்னாள் வேளாண் துறை அமைச்சர் துரைக் கண்ணுவின் மனைவி பானுமதி, அதிமுக பாபநாசம் ஒன்றியச் செயலர் சண்முக பிரபு, அசோக் குமார், மாவட்ட சுகாதார பணி கள் இணை இயக்குநர் அன்பழகன் மற்றும் மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர். பாபநாசம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜி. குமரவேல் ஏற்புரை வழங்கி னார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் ராஜஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார். அலவந்திபுரம் ஊராட்சியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் பொது விநியோக கட்டடம் மற்றும் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நடந்து வரும் வடிகால் வாய்க்கால் பணி, உமையாள்புரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நர்சரி உள்ளிட்டவற்றை நேரில் ஆய்வு செய்தார்.