tamilnadu

img

பொறியாளராக ஆக விரும்புகிறீர்களா?

+2 தேர்வு முடிவுகள் வந்தவுடன் பி.இ. மற்றும்  பி.டெக் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டது. அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்  கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு மே.6 அன்று தொடங்கியது. இந்தப் பதிவு ஜூன் 6ம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tneaonline.org  என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங் களை பதிவேற்றம் செய்யலாம். மேலும், விண்ணப்ப பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் கடந்த ஆண்டைப் போலவே மாநிலம் முழு வதும் 110 சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு விண்ணப்ப பதிவு தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் காலை 8 முதல் 6 மணி வரை தொழில்நுட்ப கல்வி  இயக்ககத்தில் உள்ள அழைப்பு மையத்திற்கு, 1800-452-0110 என்ற எண்ணுக்கு அழைத்துத் தங்கள் சந்தே கங்களை தீர்த்துக்கொள்ளலாம். கூடுதல் விபரங்கள் தேவைப்படுபவர்கள் tneacare@ gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.  சிறப்பு இடஒதுக்கீடு மற்றும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அட்டவணைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் பி.இ, பி.டெக் படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ள நிலையில் முதல் நாள்  மாலை 6 மணி நிலவரப்படி 20,097 பேர் விண்ணப்ப பதிவு  செய்துள்ளனர். இவர்களில் 5,812 பேர் விண்ணப்பத்திற் கான கட்டணத்தையும், 1519 பேர் சான்றிதழ்கள் பதிவேற்றமும் செய்துள்ளனர்.

சேர்க்கைக்கான கால அட்டவணை
*    விண்ணப்ப பதிவு தொடக்கம் மே 6
*    விண்ணப்ப பதிவு இறுதி நாள் ஜூன் 6
*    சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12
*    ரேண்டம் எண் வெளியீடு ஜூன் 12
*    சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13 முதல் ஜூன் 30
*    தரவரிசை பட்டியல் வெளியீடு ஜூலை 10
*    சேவை மையம் வாயிலாக குறைகளை நிவர்த்தி செய்தல் ஜூலை 11 முதல் ஜூலை 20

பி.டெக் பொறியியல்  (4 ஆண்டுகள்)

பெட்ரோ கெமிக்கல் , பெட்ரோலியம் , சிவில் , எந்திர பொறி யியல் , வானூர்தி , விண்வெளி, விவசாயம், கட்டிடக்கலை,  ஆட்டோமொபைல், ஆட்டோமேஷன் & ரோபாட்டிக்ஸ், ஏவியனிக்ஸ், உயிரியல் மருத்துவம், பயோ டெக்னா லஜிக்கல், இரசாயன, செராமிக்ஸ், கணினி அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் &  எலக்ட்ரானிக்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல், தகவல் அறி வியல், தொழில்துறை, தொழில்துறை உற்பத்தி, கருவி  தொழில்நுட்பம், கடல் பொறியியல், மெடிக்கல் எலக்ட்ரா னிக்ஸ், சுரங்க பொறியியல், உற்பத்தி அறிவியல், கடற்படை  கட்டிடக்கலை, நானோ தொழில்நுட்பம், பாலிமர் டெக்னா லஜி, சில்க் பாலிமர், கார்பெட் தொழில்நுட்பம், ஜவுளி பொறியியல், ரோபாட்டிக்ஸ் மற்றும் மரபியல்.