tamilnadu

img

இந்திய தேயிலை வாரியத்தை சீரழிக்காதே! - கே.சி.கோபிகுமார்

தேயிலை தொழிலில் தேயிலை தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்ற போதிலும், தேயிலை மசோதாவில் தொழிலாளர் சமூகத்தை பங்குதாரர்களாக சேர்க்காமலிருப்பது என்பது சரியான முறையில்லை. 

சென்னை,பிப்.13-  ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தேயிலை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு மசோதா தொழிலாளர் விரோத, தொழில் விரோத விதிகளை கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ள தமிழ்நாடு தோட்டத் தொழி லாளர் ஒருங்கிணைப்புக்குழு, ஒருதலை ப்பட்சமாக நடவடிக்கை எடுக்காமல், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், தோட்ட முதலாளி களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர் ஒருங்கிணைப்புக்  குழுவின் (சிஐடியு) கன்வீனர் கே.சி.கோபிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்திய ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இந்திய தேயிலை சட்டம், 1953 ஐ நீக்கி, தேயிலை (மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு) மசோதா-2022-ஐ 2022  ஜனவரி 10 அன்று அதன் இணைய தளத்தில் வெளியிட்டு அதன் மீது ஜன வரி 21-க்குள் கருத்து பொதுமக்களிட மிருந்து கோரியது. சிஐடியு ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் இந்த உத்தேச மசோ தாவில் உள்ள பல்வேறு விதிகள் பற்றிய சுருக்கமான ஆய்வுக்குப் பிறகு, அரசு செய்ய வேண்டிய  தலையீடுகள் குறித்து  சம்பந்தப்பட்ட அமைச்சகம் மூலம் அர சாங்கத்தின் முன் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளன. அதே நேரத்தில் முன் மொழியப்பட்ட மசோதா மீதான பல்வேறு தொழிலாளர் விரோத மற்றும்  தொழில் விரோத சட்ட விதிகள் குறித்த தொழிற்சங்கங்கள் விரிவான ஆட்சேப ணைகளைச் சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளன.  

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமோ அல்லது இந்திய தேயிலை வாரியமோ இந்த மசோ தாவை கவனமாக பரிசீலித்து எங்கள் கருத்துக்களை பதிவு செய்வதற்கு போதுமான கால அவகாசம் கொடுக்க வில்லை. தேயிலை தோட்டத் தொழில், தொழிலாளர்களின் அதிக உடல் உழைப்பு மிகுந்த தொழிலாக இருப்ப தால், தேயிலைத் தோட்டத் தொழிலா ளர்கள் அல்லது அவர்களது தொழிற் சங்கங்கள் முக்கிய பங்குதாரர்கள் ஆவார்கள். இந்த பிரச்சனையில் அவர்களின் கருத்தை புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் கூடாது. மேலும், சாமானிய தோட்டத் தொழிலா ளர்கள்  அரசின் அறிவிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க பல்வேறு அமைச்ச கங்களின் இணையதளங்களை தொட ர்ந்து அலசுவார்கள் என்று எதிர்பார்க்க  முடியாது. அவசர அவசரமாக கருத்து களைத் கூற நிர்ப்பந்தப்படுத்துவது என்பது ஜனநாயகப் பங்கேற்பின் நோக்கத்தையே தோற்கடிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் கருத்துகளைப் பெறுவதற் கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தை தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. 

சிறு தேயிலை விவசாயிகளை பாதிக்கும்....

தேயிலை மசோதா 2022 இன் முன்மொழிவில் நாட்டின் தேயிலை வாரியம் எதற்காக துவக்கப்பட்டது என்பதின் நோக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்களை பறிப்பதற்கான மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.  தேயிலை வாரியத்தின் செயல்பாடு கள், தேயிலையின் உற்பத்தி, விற் பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் பொருளாதார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேம்படுத்துவதையும் இந்த மசோதா 2022 முன்மொழிகிறது. ஆனால் தொழிலாளர் நலனில்  வாரியத்தின் பங்கு தவிர்க்கப்பட்டுள் ளது. மேலும், தேயிலை வாரியத்திற்கு எந்த ஒழுங்குமுறை அதிகாரங்களையும் வழங்கவில்லை, அது முற்றிலும் நிராயுதபாணியாக விடப்பட்டுள்ளது என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள் ளன. போட்டிகள் நிறைந்த திறந்த சர்வதேச சந்தையில் ஏற்றுமதி ஒதுக் கீட்டை ஒழுங்குபடுத்துவது தேவை யற்றது மற்றும் சிறு தேயிலை விவசாயி களின் வளர்ச்சியை பாதிக்கும்.  தேயி லை பயிரிடுதலின் கீழ் நிலத்தை ஒழுங்கு படுத்துவதற்கான விதிகளை நீக்குவது  என்பது அவர்களின் உரிமைகளை பறிக்கும் ஏற்பாடாகும். உலக சந்தையில் தேயிலையின் முக்கிய உற்பத்தியாள ராக இந்தியா இருப்பதால், தேயிலை வாரியம் தேசிய நலன்களிலும், இந்த  அதிக உழைப்பு மற்றும் நிலம் சார்ந்த தொழில்துறையின் நலன்களிலும் ஒரு திட்டவட்டமான மற்றும் ஒழுங்குமுறை பங்கைக் கொண்டுள்ளது, இது நமது நாட்டிற்கு மிகப்பெரிய அந்நிய செலா வணி வருவாயை ஈட்டி வருகிறது.

தேயிலை தொழிலாளர் நலனை கைகழுவும் அரசு

அத்தியாயம் 3 (தேயிலை சாகு படியின் விரிவாக்கம் மீதான கட்டுப்பாடு) மற்றும் அத்தியாயம் 4 (தேயிலை மற்றும் தேயிலை விதை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு) ஆகியவற்றைத் தவிர்த்து, தேயிலை வாரியத்தின் ஒழுங்குமுறை அதிகாரங்களைப் பறிக்கிறது. “சில சூழ்நிலைகளில் ஒன்றிய அரசின் ‘தேயிலை நிறுவனங்கள்’ நிர்வகித்தல் அல்லது கட்டுப்படுத்துதல்” தொடர் பான அத்தியாயம் 3 ஏ முழுவதுமாக வில க்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரிய மாக உள்ளது. இது, தொழில்துறை யின் நலன்கள், அதில் ஈடுபடுத்தப் பட்டுள்ள பெரும் நில வளங்கள் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலா ளர்கள்  நலன்களைப் பாதுகாப்பதற் கான பொறுப்பை அரசாங்கத்தால் முற்றிலுமாக முழுமையாகத் தட்டிக் பழிக்கப்பட்டுள்ளது. இந்திய தேயிலை வாரியம் வழங்கிய தகவல்களின்படி, மாநிலங்களில் 420670.63 ஹெக்டேர் நிலத்தில் 1569  தோட்டங்களில் தேயிலை பயிரிடப்படு கின்றன.

இந்த தோட்டங்களில் 13 லட்சத் திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தேயிலை தோட்டங்களுக்கு கொண்டு வரப்பட்ட புலம்பெயர்ந்த தொழி லாளர்களின் வழித்தோன்றல்கள். அவர்கள் தேயிலை தோட்டங்களுக்குள் வாழ்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு வீட்டு உரிமைகள் அல்லது நில உரிமைகள் இல்லை. அவர்கள் உணவு, சுகாதாரம், மற்றும் கல்விக் காக தோட்டங்களையே முழுமையாக நம்பியிருக்கிறார்கள். அந்த தொழி லாளர்கள் தனிநபர்கள் அல்ல, தொழிலாளர் சமூகத்தை சார்ந்தவர்கள் ஆவர். அத்தியாயம் 3 ஏ விலக்கப்பட்டால், தேயிலைத் தோட்டத்தின் கீழ் 420670.63  ஹெக்டேர் நிலம், போட்டி வணிக நட வடிக்கைகளுக்காக உட்படுத்தப்படு கிறது ஆனால் தேயிலை மசோதா  2022 இந்தத் தேயிலைத் தோட்டங் களைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் சமூகங்களின் உரி மைகள் குறித்து முற்றிலும் அமைதியாக உள்ளது, அரசின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது, மேலும் இது தொழிலாளர் உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சூழ்நிலையை உருவாக்குகிறது என்று  எச்சரிக்கிறோம். தேயிலைத் தோட்டங் கள் மூடப்படுவதும் கைவிடப்படுவதும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதில் பணிபுரியும் தொழிலாளர்களின் அவல நிலைகளை கருத்தில் கொண்டு இந்த  விஷயத்தில் அரசு மிகுந்த அக்கறை யோடும் எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும். 

பாதிக்கப்படும் சுற்றுச்சூழல் சமநிலை

2022 தேயிலை மசோதா, நூற்றுக் கணக்கான தேயிலைத் தோட்டங்களை வணிக பயன்பாட்டிற்குத் திறப்பது, வாரியத்தின் ஒழுங்குமுறை மேற்பார்வையின்றி, சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. தேயிலை தோட்டங்களில் மரங்கள், காடுகள் மற்றும் நீர்நிலைகள் உள்ளன. இந்த திருத்தங்களால் சுற்றுச் சூழல் சமநிலை மீதான பாதிப்பு அதி கரிக்கும் என்பதை தொழிற்சங்கங்கள் கவலையுடன் பார்க்கிறது. தேயிலை தொழிலில் தேயிலை தொழிலாளர்களின் பங்கு மிக முக்கிய மானது என்ற போதிலும், தேயிலை மசோதாவில் தொழிலாளர் சமூகத்தை பங்குதாரர்களாக சேர்க்காமலிருப்பது என்பது சரியான முறையில்லை. இந்த  விடுபடல் சரி செய்யப்பட வேண்டும்,  தொழிலாளி மற்றும் அவர்களது தொழிற் சங்கங்கள் பங்குதாரரின் வரையறைக் குள் சேர்க்கப்பட வேண்டும். அனைத்து ஆலோசனைகளிலும் சம பங்காளியாக இருக்க வேண்டும்.

கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்துக!

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமோ அல்லது இந்திய தேயிலை வாரியமோ இதுவரை தேயிலை மசோதா 2022 குறித்து தொழிற்சங்கங்களின் கருத்துக்களை கேட்க அழைக்கவில்லை என்பது  கவலை அளிக்கிறது. ஆரோக்கியமான தொழில்துறை யின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள் ளும் அதே வேளையில், தேயிலை மசோதா 2022 ஐ உருவாக்கும் போது, ​​தேயிலை தொழிலாளர்கள் மற்றும் தேயிலை சமூகத்தின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதைப் பற்றி தொழிற்சங்கங்கள் கவலை கொண்டுள்ளன.   ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மேற்கூறிய கருத்துக்கள், குறுக்கீடுகள் மற்றும் கவலைகளை உரிய முறையில் கவ னிக்காமல் ஒருதலைப்பட்சமான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், பொதுமக்களிடம் இருந்து குறிப்பாக தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற் சங்கங்களின் கருத்துகளைப் பெறு வதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும், கருத்துகளைக் கேட்க போதுமான அறிவிப்புடன் கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் அரசை வலியுறுத்துகிறது.  மேலும் தமிழக அரசும் தொழி லாளர் துறையும் தமிழ்நாட்டில் இதன் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் போது தமிழக தோட்டத் தொழிலையும், தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கின்ற வகையில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்ட முதலாளிகளின் அமைப்புகளை அழைத்துப் பேச வேண்டும் என்று சிஐ டியுவுடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர் ஒருங்கிணை ப்புக் குழு  தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.